ஆறாம் கசபன்ஆறாம் கசபன் என்பவன், இலங்கையை ஆண்ட ஐந்தாம் மகிந்தனின் மகனும், வாரிசும் ஆவான். நாட்டைச் சோழர் கைப்பற்றிய பின்னர் இவன் ரோகணத்தில் மறைவாக வளர்க்கப்பட்டான். ஆனாலும், இவன் எக்காலத்திலும் அரசனாக முடிசூட்டிக்கொள்ளவில்லை. ஐந்தாம் மகிந்தனைச் சோழர் பிடித்துச் சென்றபோது, சிறுவனாக இருந்த கசபன், சோழருக்குத் தெரியாமல் வளர்க்கப்பட்டான். சிங்களவர்கள் அவனை விக்கிரமபாகு என அழைத்ததுடன், அரசனுக்குரிய மதிப்பையும் கொடுத்துவந்தனர். அவனுக்கு 12 அறிந்த சோழர் அவனைப் பிடிப்பதற்காகப் படைகளை அனுப்பினர். ஆனால், அவர்களது முயற்சி வெற்றி பெறவில்லை. நாட்டை மீட்பதற்குத் தேவையான பொருளையும், படைகளையும் திரட்டுவதில் ஈடுபட்டிருந்த ஆறாம் கசபன், மணிமுடி, குடை, கொடி, அரியணை முதலியவற்றையும் செய்வித்தான். பெரியோர் இவனுக்கு முடுசூட்டுவதற்கு எண்ணியபோதும், நாட்டை மீட்காமல் முடிசூட்டிக் கொள்வதில் பயனில்லை என மறுத்துவிட்டான்.[1] சோழர் மீது படையெடுப்பதற்கான தயார்நிலை இருந்தும், பல்வேறு காரணங்களால் இந்த முயற்சி கைகூடவில்லை. நாட்டை மீட்கும் எண்ணம் நிறைவேறாமல், தனது 18 ஆவது ஆட்சி ஆண்டில், இளம் வயதிலேயே கசபன் உயிரிழந்தான். மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவும் |
Portal di Ensiklopedia Dunia