ஆலகாலம் (திரைப்படம்)
ஆலகாலம் (Aalakaalam) என்பது 2024 இல் ஜெயா கிருஷ்ணமூர்த்தியின் எழுத்து இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ் சமூக நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஈஸ்வரி ராவ், ஜெயா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருந்தனர். ஸ்ரீ ஜெய் புரொடக்சன்சு சார்பில் ஜெயா கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை தயாரித்தார். நடிகர்கள்
தயாரிப்புஇப்படம் ஜெயா கிருஷ்ணமூர்த்தியின் இயக்குநர் அறிமுகத் திரைப்படமாகும்[1][2] வரவேற்புடைம்ஸ் நவ் மணிகண்டன் கே. ஆர் 5-இற்கு 2.5 நட்சத்திரங்கள் என்று மதிப்பிட்டு "திரைப்படம் வழங்குவதற்கான ஒரு சக்திவாய்ந்த செய்தியைக் கொண்டுள்ளது. ஆனால் இது முற்றிலும் பொழுதுபோக்கு இல்லாதது" என்று குறிப்பிட்டார்.[3] "கதாநாயகனின் தாயாக ஈஸ்வரி ராவின் நடிப்பு படத்தின் ஒரு பெரிய பலம் என்றும், திரைப்படத்தின் இறுதிக்கட்டக் காட்சி திகைப்பூட்டுகிறது" என்றும், மாலை மலர் விமர்சகர் எழுதினார். விரகேசரி விமர்சகர், "இறுதிக்கட்டக் காட்சியை வித்தியாசமாக அமைத்த இயக்குநரைப் பாராட்டுங்கள். அக்காட்சியில், ஈஸ்வரி ராவ் தனது நடிப்பைக் கொடுத்து இரசிகர்களின் இதயங்களை கவர்கிறார்" என்று குறிப்பிட்டார்.[4][5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia