ஆலமரத்துப்பட்டி (விருதுநகர்)
ஆலமரத்துப்பட்டி (Alamarathupatti) என்பது தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி வட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.[1][2] அமைவிடம்ஆலமரத்துப்பட்டி திருத்தங்கலிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும் சிவகாசியிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. ஆலமரத்துப்பட்டியைச் சுற்றி செங்கமலப்பட்டி, நாரணாபுரம், செல்லையநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களும், திருத்தங்கல், சிவகாசி ஆகிய நகரங்களும் உள்ளன. இக்கிராமத்தில் மிகப் பழமையான அரசமரமும், காளி கோவிலும், கிருட்டிணர் கோவிலும் அமைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் திருவிழா மிக விமரிசையாக இக்கிராமத்தில் நடைபெறும். திருவிழாவின் போது நாராயணர் மற்றும் நாச்சியார் சுவாமி சிலைகள், திருத்தங்கலிலிருந்து பல்லக்கில் கொண்டு வரப்பட்டு பூசை செய்யப்படும். இப்பல்லக்கை கிராம மக்களே சுமந்து வருவர். இக்கிராமத்தில் நுழையும் இடத்தில் முக்கு பிள்ளையார் கோயில் உள்ளது. புதிய முயற்சிகளில், புதிய வேலைகளில் ஈடுபடும் போது முக்கு பிள்ளையாரை வணங்கிச் செல்வர். மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia