ஆலம்பூண்டி
ஆலம்பூண்டி என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் ஆகும்.[1] அமைவிடம்கடல் மட்டத்திலிருந்து சுமார் 128.15 மீ. உயரத்தில், (12°15′20″N 79°20′37″E / 12.2555°N 79.3437°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, ஆலம்பூண்டி அமைந்துள்ளது. கல்விபள்ளிகள்செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி என்ற பள்ளி ஒன்று ஆலம்பூண்டியில் கட்டப்பட்டுள்ளது.[2] கல்லூரிகள்ஸ்ரீரங்கபூபதி பொறியியல் கல்லூரி என்ற கல்லூரி ஒன்றும் இங்கு அமைந்துள்ளது.[3] ஸ்ரீரங்கபூபதி பாலிடெக்னிக் கல்லூரி, ஸ்ரீரங்கபூபதி கல்வியியல் கல்லூரி மற்றும் சில கல்வி நிறுவனங்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன. சமயம்இந்துக் கோயில்கள்ஆலகால ஈசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று ஆலம்பூண்டியில் அமையப் பெற்றுள்ளது.[4] அரசியல்ஆலம்பூண்டி பகுதியானது, செஞ்சி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, ஆரணி மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia