ஆலவட்டம்

ஆலவட்டம்
கிழக்குப் பல்கலைக் கழக இன்னிய அணியில் ஒரு அங்கமாக ஆலவட்டம்

ஆலவட்டம் (Aalavattam) என்பது தெய்வங்கள் மற்றும் அரச பிரதானிகளின் ஊர்வலங்களின் போது இருபுறமும் ஏந்தப்பட்டுவரும் அலங்காரமான ஒரு மரியாதைப் பொருளாகும். இது பொதுவாக வட்டவடிவிலான கேடய வடிவில் காணப்படும். சிலவற்றில் இறகுகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும். இது திருவிழாக்கள் மற்றும் நடனங்களின் போது, ​​குறிப்பாக தென்னிந்தியாவில் மரியாதைக்குரிய சிலைகள், தெய்வங்கள் அல்லது தொன்மக் கதாபாத்திரங்களின் இருபுறமும் வைக்கப்படுகிறது.[1] இந்தப் பொருள் இந்தியாவின் உள்ள கேரள மாநிலத்தில் தனித்துவமாக பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பெயர் தமிழ் மற்றும் மலையாளத்திலிருந்து வந்ததாகும்.[2]

மேற்கோள்கள்

  1. Nayyar, Sanjeev. "Why we shouldn't ban elephants in Kerala temples". Rediff (in ஆங்கிலம்). Retrieved 2025-01-29.
  2. "Aalavattam". 2023.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya