ஆல்பர்ட் ஹாப்மன்
ஆல்பர்ட் ஹாஃப்மன் (Albert Hofmann, சனவரி 11, 1906 – ஏப்ரல் 29, 2008)[1][2] சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஓர் அறிவியலாளர் ஆவார்.இவர் லைசெர்ஜிக் ஆசிட் டைதைலமைடு (எல்எஸ்டி) எனப்படும் போதை மருந்தை வேதிவினைகளால் செயற்கையாகச் சேர்த்த, உட்கொண்ட, அதன் இல்பொருள்தோற்றம் விளைவிக்கும் பண்பை உணர்ந்த முதல் நபராக அறியப்படுகிறார். மேலும் மாயத்தோற்றக் காளான்களில் முதன்மையான சேர்மங்களாக சிலோசைபின், சிலோசின் ஆகியவற்றை அடையாளப்படுத்திய, தனிப்படுத்திய, செயற்கையாக சேர்த்த முதல் நபராகவும் உள்ளார்.[3] நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளையும் பல நூல்களையும் எழுதியுள்ளார். இவற்றில் எல்எஸ்டி: மை பிராப்ளம் சைல்டு என்ற நூல் முதன்மையானதாகும்.[2] 2007இல் த டெலிகிராப் இதழ் வெளியிட்ட 100 வாழும் அறிவாளிகளின் பட்டியலில் இவரும் டிம் பேர்னேர்ஸ்-லீயும் இணைந்து முதலிடம் பெற்றனர்.[4] மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia