ஆவாபாய் பொமாஞ்சி வாடியா
ஆவாபாய் பொமாஞ்சி வாடியா (Avabai Bomanji Wadia, செப்டம்பர் 18, 1913 – ஜூலை 11, 2005): இலங்கையில் பிறந்த இந்திய சமூக செயல்பாட்டாளரும், எழுத்தாளரும் ஆவார்.[1][2] தேசிய திட்டமிட்ட குழந்தை வளர்ப்பு அமைப்பு என்ற அமைப்பை நிறுவியவர். மேலும் அரசு சாராத நிறுவனங்களின் மூலம் பாலியல் சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.[3][4] 1971 ஆம் ஆண்டு இந்திய குடியரசின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[5] வரலாறுஇளமையும் கல்வியும்ஆவாபாய் 1913, செப்டம்பர் பதினெட்டாம் நாள் அன்றைய பிரித்தானிய இலங்கையின் கொழும்பில் பிறந்தார். இவருடைய குடும்பம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தினைப் பூர்வீகமாகக் கொண்டது; மேலும் மிகவும் வசதியான, மேற்கத்தியக் கலாச்சாரத்தைப் பின்பற்றிய பார்சி மக்கள் இனத்தைச் சேர்ந்தது. ஆவாபாயின் தந்தை தோரப்ஜி முஞ்ச்செர்ஜி, கப்பல் அதிகாரியாகப் பணியாற்றினார்.,[3] இவருடைய தாயார் ஆரிஸ்வாலா மேத்தா இல்லத்தரசியாக இருந்தார். கொழும்பில் பள்ளிப்படிப்பைத் தொடங்கிய ஆவாபாய், 1928 இல் தனது பதினைந்தாம் வயதில் இந்திலாந்து சென்றார். அங்கு பிராண்ட்ஸ்பெரியில் உள்ள குவீன்ஸ் பார்க் கம்யூனிட்டி பள்ளியிலும், பின்னர் இலண்டனில் உள்ள கில்பர்ன் உயர்நிலைப்பள்ளியும் தனது படிப்பை முடித்தார்.[3] 1932 இல் சட்டம் பயின்ற ஆவாபாய் 1934 இல் இன்ஸ் ஆஃப் கோர்ட்டில் (நீதிமன்றம்) தன்னை ஒரு வழக்குரைஞராகப் பதிவுசெய்து கொண்டார். இவர் சட்டத்தேர்வை எழுதி வெற்றிபெற்ற முதல் இலங்கைப் பெண் ஆவார்.[3] 1936-1937 இல் இலண்டன் உயர்நீதிமன்றத்தில் ஒருவருடம் வழங்குரைஞராக பயிற்சிபெற்றார். ஒரு சட்ட மாணவர் என்ற முறையில், அவர் பொதுநலவாய மாநாட்டிலும், சர்வதேச பெண்கள் கூட்டமைப்பு மாநாடுகள், பல்வேறு பேரணிகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்துகொண்டார். மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா, ஜவஹர்லால் நேரு ஆகிய இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட தலைவர்கள் இலண்டன் வந்திருந்த பொழுது, அவர்களை ஆவாபாய் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.[3] இந்தத் தொடர்பின் காரணமாக, ஆவாபாய் இளநிலை வழக்குரைஞராகப் பணிபுரிய சில நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கும் பொழுது அந்நிறுவனங்கள் இந்தனைக் காரணமாகக் கூறி அவரை நிராகரித்தன. பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து ஆவாபாய் இலண்டனில் இருந்து 1939 இல், தமது தாயகமான கொழும்பு திரும்பினார். அங்கு உச்சநீதி மன்றத்தில் பதிவுபெற்று வழக்குரைஞராக 1939 முதல் 1941 வரை பணியாற்றினார்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia