ஆஷ்ரம் விரைவுவண்டி
ஆஷ்ரம் எக்ஸ்பிரஸ் (Ashram Express) 12915 மற்றும் 12916 ஆகிய எண்களுடன் செயல்படும் அதிவிரைவுவண்டி. இது அகமதாபாத் சந்திப்புக்கும் பழைய டெல்லிக்கும் இடையே செயல்படுகிறது. இது 12915 என்ற எண்ணில் அகமதாபாத் சந்திப்பிலிருந்து பழைய டெல்லிக்கும், 12916 என்ற எண்ணில் பழைய டெல்லியில் இருந்து அகமதாபாத் சந்திப்பிற்கும் செயல்படுகிறது. 1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில், ஆஷ்ரம் விரைவுவண்டிக்கான ரயில் பாதை குறுகிய இருப்புப் பாதையிலிருந்து, அகலப்பாதையாக மாற்றப்பட்டது. அதற்கு முன்பு குறுகிய இருப்புப்பாதையாக இருந்தவரை ஆஷ்ரம் எக்ஸ்பிரஸ் 505 மற்றும் 506 வண்டி எண்களுடன் செயல்பட்டது. வழித்தடமும் நிறுத்தங்களுக்கான நேரமும்12915 என்ற வண்டி எண்ணுடன் செயல்படும் ஆஷ்ரம் எக்ஸ்பிரஸ், அகமதாபாத் சந்திப்பில் இருந்து தினமும் மாலை 6.30 மணியளவில் புறப்பட்டு பழைய டெல்லியினை அடுத்த நாள் காலை 10.10 மணியளவில் வந்தடைகிறது.[1] 12916 என்ற வண்டி எண்ணுடன் செயல்படும் ஆஷ்ரம் எக்ஸ்பிரஸ், பழைய டெல்லியிருந்து தினமும் மாலை 3.20 மணியளவில் புறப்பட்டு அகமதாபாத் சந்திப்பினை அடுத்த நாள் காலை 7.40 மணியளவில் வந்தடைகிறது.[2]
சராசரி வேகம்வண்டி எண் 12915 ஆஷ்ரம் எக்ஸ்பிரஸ், 15 மணி நேரம் மற்றும் 40 நிமிடங்களை பயண நேரமாகக் கொண்டுள்ளது. 18 நிறுத்தங்களுடன் சுமார் 938 கிலோ மீட்டர் தூரத்தினை மணிக்கு 59 கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கிறது. இது சராசரியாக 2 நிமிடங்கள் தாமதத்துடன் புறப்படுகிறது, அத்துடன் சராசரியாக 29 நிமிடங்கள் தாமதத்துடன் வந்தடைகிறது. இதன் ரயில்பெட்டிகளின் அமைப்பு பின்வருமாறு அமையும்:[3] L – SLR – GEN – GEN – S1 – S2 – S3 – S4 – S5 – S6 – S7 – S8 – S9 – S10 – S11 – S12 – S13 – B3 – B2 – B1 – A1 – HA1 – GEN – GEN - SLR அதேபோல் வண்டி எண் 12916 ஆஷ்ரம் எக்ஸ்பிரஸ், 16 மணி நேரம் மற்றும் 20 நிமிடங்களை பயண நேரமாகக் கொண்டுள்ளது[4]. 18 நிறுத்தங்களுடன் சுமார் 938 கிலோ மீட்டர் தூரத்தினை மணிக்கு 57 கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கிறது. இது சராசரியாக எவ்வித தாமததும் இல்லாமல் புறப்படுகிறது, அத்துடன் சராசரியாக 5 நிமிடங்கள் தாமதத்துடன் வந்தடைகிறது. இதன் ரயில்பெட்டிகளின் அமைப்பு பின்வருமாறு அமையும்:[5] L – SLR – GEN – GEN – HA1 – B1 – B2 – B3 – S13 – S12 – S11 – S10 – S9 – S8 – S7 – S6 – S5 – S4 – S3 – S2 – S1 - GEN – GEN – SLR ஆஷ்ரம் எக்ஸ்பிரஸ், BGKT WDP4/WDP4B/WDP4D என்ற இஞ்சினை பயன்படுத்தி தற்போது செயல்பட்டு வருகிறது. குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia