ஆ. பத்மநாபன் (பிறப்பு 14-12-1928[1]) இந்திய ஆட்சிப்பணியாளருள் ஒருவர். மிசோரம் மாநிலத்தின் ஆளுநராகப் பதவிவகித்தவர். தமிழ்நாட்டுக்குத்தலைமைச் செயலாளராகப் பணியாற்றியவர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஆனந்தம் என்பவருக்கு 14-12-1928ஆம் நாள் பிறந்தவர். உடன்பிறந்தவர்கள் அறுவர்.[2] இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று கலைஇளவர், கலைமுதுவர் பட்டம் பெற்றவர். இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் தேர்ச்சியடைந்த முதல் தலித்[2] இவரே ஆவார். 1940களில் முனைவர் அம்பேத்கர் சென்னைக்கு வந்திருந்தபொழுது அவரை மாணவராக இருந்த ஆ. பத்மநாபன் உரையாடியுள்ளார்.[3]
ஆற்றிய பணிகள்
இவர் இந்திய ஆட்சிப்பணியாளராக 1956 மே 1ஆம் நாள் 1988 சூன் 30ஆம் நாள் வரை 32 ஆண்டுகள் பல்வேறு நிலைகளில் பணியாற்றினார்[1]. அவற்றுள் சில:
சார் ஆட்சியராக சேரன்மாதேவி.[4], திருச்சி[2] ஆகிய இடங்களில் பணியாற்றினார்.
சேலம் மாவட்ட ஆட்சியராக 8-5-1963ஆம் நாள் முதல் 12-4-1965ஆம் நாள் வரை பணியாற்றினார்.[5] and [6]
தமிழ்நாட்டரசின் தொழிலாளர் மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநராக 03.09.1968ஆம் நாள் முதல் 05.07.1969 [7] வரை பணியாற்றினார்.
புதுதில்லியிலுள்ள கல்வி மேன்மைக்கும் அணுக்கலுக்குமான நிறுவ (Foundation For Academic Excellence and Access - FAEA) ஆட்சிக்குழு உறுப்பினர்.
தமிழ்நாட்டில் குடியரசுத்தலைவர் ஆட்சி நடைபெற்ற பொழுது 1988 சனவரி 30ஆம் நாள் முதல் 1989 சனவரி 27ஆம் நாள் வரை இவர் ஆளுநருக்கு ஆலோசகராகப் பொறுப்புவகித்தார்.[19]
வாழ்க்கை வரலாறு
ஆ. பத்மநாபனின் வாழ்க்கை வரலாற்றை பசுபதி தனராஜ் என்பவர் தொகுத்து "ஆ.பத்மநாபன் -ஆளுமையின் அரிய பரிமாணம்" என்னும் நூலாக வெளியிட்டுள்ளார்.[20]