இக்கின்பாதம்ஸ்![]() இக்கின்பாதம்ஸ் (Higginbotham's) இந்தியாவின் சென்னையிலுள்ள ஒரு புத்தக நிலையம். இந்தியாவிலேயே மிகப்பழமையான புத்தக நிலையம் இது.[1][2][3][4][5] இதன் கிளைக் கடைகள் தமிழகம், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளாவில் 22 இடங்களில் உள்ளன.[4] வரலாறுஏபெல் யோசுவா இக்கின்பாதம்சு என்ற ஆங்கிலேய நூலகரால் 1844 இல் நிறுவப்பட்டது இக்கின்பாதம்ஸ்.[6] 1860-களில் தற்போதுள்ள பெரிய கட்டடத்திற்கு விற்பனையை மாற்றினார் ஏபெல் யோசுவா. 1891 இல் அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் சி.எச். இக்கின்பாதம்சு இந்நிறுவனத்தை நடத்தி வந்தார்.[6] 1921 -ஆம் ஆண்டு அசோசியேட்டட் பப்ளிசர்சின் ஜான் ஓக்ஷாட் ராபின்சன் என்பவரால் வாங்கப்பட்டு பின்னர் அமால்கமேசன்சு குழுமத்தால் அசோசியேட்டட் பப்ளிசர்சு 1945 இல் வாங்கப்பட்டதிலிருந்து இன்று வரை அக்குழுமத்திடமே இருந்து வருகிறது.[7] 1929 -இலேயே 400 ஆட்கள் வேலை செய்து வந்துள்ளனர் இந்நிலையத்தில். 1990கள் வரை இந்தியாவின் மிகப்பெரிய புத்தகக்கடையாக விளங்கியது.[2][4] அண்ணா சாலையில் உள்ள இதன் முதன்மைக் கட்டிடத்தை விலைக்கு வாங்கி அங்கு பெரும் பல்மாடி வணிக வளாகம் அமைக்க முயன்ற முயற்சி தோல்வியுற்றது.[3] 1989ஆம் ஆண்டு மேற்கொண்ட இந்தக் கட்டிடத்தின் பராமரிப்பு முகப்புத்தோற்றத்தின் முந்தைய வனப்பை மீட்டது.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia