இங்கிலாந்து தேசிய காற்பந்து அணி
இங்கிலாந்து தேசிய கால்பந்து அணி (England national football team), பன்னாட்டு கால்பந்தாட்டப் போட்டிகளில் இங்கிலாந்தின் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும்; இதனை, இங்கிலாந்தில் கால்பந்து விளையாட்டுக்கான மேலாண்மை அமைப்பான கால்பந்துச் சங்கம் நிர்வகிக்கிறது. இசுக்கொட்லாந்துடன் இங்கிலாந்தும் உலகின் மிகப்பழமையான இரு தேசிய கால்பந்து அணிகளாகும்; இவ்விரு அணிகளும் 1872-ஆம் ஆண்டில் முதல் பன்னாட்டுக் கால்பந்துப் போட்டியை ஆடின. இங்கிலாந்தின் தன்னக விளையாட்டரங்கம், லண்டனிலுள்ள வெம்பிளி விளையாட்டரங்கம் ஆகும். இங்கிலாந்து அணியினர் 1966-ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை வென்றிருக்கின்றனர். அதன்பின்னர், அவர்களது சிறந்த உலகக்கோப்பை செயல்பாடு என்பது 1990-இல் அரையிறுதியை எட்டியது ஆகும். ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியை இங்கிலாந்து அணியினர் வென்றதில்லை. அப்போட்டியில் அவர்களின் சிறந்த செயல்பாடு, 1968 மற்றும் 1996-ஆம் ஆண்டுகளில் அரையிறுதியை எட்டியது ஆகும். குறிப்புதவிகள்வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia