இசுமீர்38°25′19″N 27°07′44″E / 38.422°N 27.129°E
இசுமீர் (İzmir) அனத்தோலியாவின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள பெருநகரம் ஆகும். இது இசுதான்புல், அங்காரா என்பவற்றுக்கு அடுத்த துருக்கியில் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும்.[1][2] இசுமியரின் பெருநகரப் பகுதி இசுமீர் வளைகுடா நீரால் சூழப்பட்டுள்ளது. இந்நகரத்தின் பழைய நகரம் சிமிர்னா (சிமிர்னி, Smyrna, Smyrni கிரேக்க மொழி: Σμύρνη) என்று அழைக்கப்பட்டுவருகிறது. இந்த நகரம் இலத்தீன் நெடுங்கணக்கின் துருக்கிய பின்பற்றலில் 1928 இசுமீர் என்ற பெயருடன் சர்வதேச அங்கீகாரம் பெற முன் பொதுவாக ஆங்கிலத்தில் சிமிர்னா என்ற பெயராலேயே குறிப்பிடப்பட்டது. 2014 இன் மக்கள் தொகை அடிப்படையில் இசுமீரின் மக்கள் தொகை 2,847,691 ஆகும். இசுமீர் மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 4,113,072 ஆகும்.[1][2] கல்விகீழ் வரும் பல்கலைக்கழகங்கள் இசுமீரில் நிறுவப்பட்டுள்ளன:
கீழ் வரும் பல்கலைக்கழகங்கள் இசுமீருக்கு அருகில் அமைந்துள்ளது:
மொத்தமாக ஒன்பது பல்கலைக்கழகங்கள் இசுமீரிலும், இசுமீருக்கு அருகிலும் அமைந்துள்ளன. காலநிலைஇசுமீர் மத்தியதரைக்கடல் காலநிலையை (கோப்பென் காலநிலை வகைப்பாடு: சூடான கோடைகால மத்தியதரைக்கடல் காலநிலை) கொண்டுள்ளது. இது நீண்ட, சூடான மற்றும் வறண்ட கோடை காலத்தைக் கொண்டுள்ளது. இதன் குளிர்காலம் இலேசான குளிரையும் மற்றும் மழையாகவும் காணப்படும். இசுமீரின் வருடாந்த திடீர் மழைவீழ்ச்சி சராசரி 686 மில்லிமீட்டர்கள் (27 அங்) ஆகும்; ஆயினும் 77% மழைவீழ்ச்சி நவம்பர் தொடக்கம் மார்ச் வரையே வீழ்கின்றது. மிகுதி மழைவீழ்ச்சி ஏப்ரல் மூலம் மே தொடக்கம் செப்டெம்பர் மூலம் அக்டோபர் வரையும் வீழ்கின்றது. சிறிய அளவு மழைவீழ்ச்சி சூன் தொடக்கம் ஆகஸ்ட் வரை கிடைக்கபெறுகின்றது. குளிர் காலத்தில் அதிக வெப்பநிலை வழமையாக 10 மற்றும் 16 °C (50 மற்றும் 61 °F) இற்கு இடைப்பட்டதாகவே காணப்படும். இசுமீரில் திசம்பர் தொடக்கம் பெப்ரவரி வரை சிலநேரங்களில் அரிதாகவே பனிப்பொழிவு இடம்பெறுகின்றது. கோடை காலத்தின் போது, காற்று வெப்பநிலை சூன் தொடக்கம் செப்டெம்பெர் வரை 40 °C (104 °F)ஆக அதிகமாக ஏறிச்செல்லும்; எனினும் வழமையாக 30 மற்றும் 36 °C (86 மற்றும் 97 °F) இற்கு இடையாகவே காணப்படுகிறது. மழைவீழ்ச்சி பதிவு = 145.3 kg/m2 (29. செப்டம்பர் 2006) பனிப்பொழிவு பதிவு = 8.0 cm (4. சனவரி 1979)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia