இசுலாத்தில் திருமணம்![]() இசுலாத்தில் திருமணம் (Marriage in Islam) (நிக்காக்) என்பது முஸ்லிம் ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்களின் விருப்பப்படி வாய்மொழி அல்லது காகிதத்தில் மூலம் ஏற்படும் இடையிலான சட்டப்பூர்வ ஒப்பந்தமாகும்.[1] இது மத ரீதியாக செல்லுபடியாகும் இசுலாமிய திருமணத்திற்கு ஒருங்கிணைந்ததாகக் கருதப்படுகிறது. மேலும் மணமகன் மற்றும் மணமகளின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை கோடிட்டுக் காட்டுகிறது. இசுலாத்தில் விவாகரத்தும் பல்வேறு வடிவங்களை எடுக்கலாம். சில விவாகரத்து கணவனால் தனிப்பட்ட முறையில் நிறைவேற்றப்படும். மேலும் சில நியாயமான காரணத்திற்காக சட்டப்பூர்வ விவாகரத்தாக மனைவி சார்பாக மத நீதிமன்றத்தால் நிறைவேற்றப்படும். மரணம் அல்லது விவாகரத்து வரை வழக்கமான திருமணத்திற்கு கூடுதலாக, ஜவாஜ் அல்-முத்தாஹ் ("தற்காலிக திருமணம்") [2] என அறியப்படும் வேறுபட்ட நிலையான கால திருமணமும் உள்ளது : 1045 சியா இசுலாமின் பன்னிருவர் கிளையினரால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு அனுமதிக்கப்படுகிறது.[3][4] : 242 [5] நிக்காக் மிஸ்யர் என்பது சில சுன்னி அறிஞர்களால் அனுமதிக்கப்பட்ட ஒன்றாக வாழ்வது போன்ற சில நிபந்தனைகளை நீக்கிய ஒரு தற்காலிக திருமணமும் உள்ளது.[6][7][8] வரலாறுகி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இசுலாம் தோன்றுவதற்கு முன்பு அரேபியாவில் பல்வேறு திருமண நடைமுறைகள் இருந்தன. இந்த நேரத்தில் மிகவும் பொதுவான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட திருமண வகைகளாக, ஒப்பந்தத்தின் மூலம் நடைபெறும் திருமணம், பெண்களை கடத்துவதன் மூலம் திருமணம், மகர் மூலம் திருமணம், பரம்பரை மூலம் திருமணம் மற்றும் "மோட்டா" அல்லது தற்காலிக திருமணம் போன்றவை இருந்துள்ளன.[9] மெசொப்பொத்தேமியாவில், திருமணங்கள் பொதுவாக ஒருதார மணம் கொண்டவை. அரச குடும்பத்தைத் தவிர, அவர்கள் மனைவிகள் மற்றும் காமக்கிழத்திகளைக் கொண்ட பல அந்தப்புரங்களைக் கொண்டிருந்தனர். திருமணம் மற்றும் விவாகரத்து ஆகிய இரண்டிலும் சம்மதம் தேவைப்பட்டாலும், சாசானியச் சமூகம் சரதுசத்தைப் பின்பற்றியது.[10] இசுலாமிய ஆதாரங்களின்படி, 7-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய அரேபியாவில் பெரும்பாலான பெண்கள் தங்கள் திருமணங்களில் சிறிய கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தனர். அவர்கள் திருமணம் அல்லது குழந்தைகளின் பாதுகாப்பிற்கான ஒப்பந்தத்தால் அரிதாகவே பிணைக்கப்பட்டனர். மேலும், அவர்களின் சம்மதம் அரிதாகவே கோரப்பட்டது. பெண்கள் தங்கள் கணவரை விவாகரத்து செய்ய அரிதாகவே அனுமதிக்கப்பட்டனர். திருமணம் அல்லது விவாகரத்துக்காக அவர்களின் கருத்து ஏற்கப்படவில்லை.[11] இருப்பினும், இசுலாம் அல்லாத சமூகத்திலிருந்து இசுலாமிய சமுதாயத்திற்கு மாறுகின்ற காலத்தில், உயரடுக்கு பெண்கள் விவாகரத்து செய்து கொண்டு, களங்கம் இல்லாமல் மறுமணம் செய்து கொள்ளலாம். அவர்களது திருமண ஒப்பந்தத்தின் விதிமுறைகளை பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் விவாகரத்து நடைமுறை கூட தொடங்கலாம்.[12] இசுலாத்துடன் சீர்திருத்தங்கள்முகம்மது நபி தனது காலத்தில் இருந்த பொதுவான திருமண நடைமுறைகளின் சட்டங்களையும் நடைமுறைகளையும் சீர்திருத்தினார். "ஒப்பந்தத்தின் மூலம் திருமணம் (ஒப்புதல் மூலம் திருமணம்)" என்ற விதிகள் சீர்திருத்தப்பட்டு கடுமையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. "பரம்பரை மூலம் திருமணம்" என்ற நடைமுறை தடைசெய்யப்பட்டது. திருக்குர்ஆனில் இருந்து பல அத்தியாயங்கள் மற்றும் வசனங்கள் வெளியிடப்பட்டன. அவை அத்தகைய நடைமுறைகளைத் தடை செய்தன.[13] அரேபிய ஜாஹிலியா சட்டத்தின் கீழ், திருமணம் செய்வதற்கு அல்லது விவாகரத்து பெறுவதற்கு ஆண்களின் உரிமைகளில் எந்த வரம்பும் விதிக்கப்படவில்லை என்று இசுலாமிய ஆதாரங்கள் குற்றம் சாட்டுகின்றன.[14] இசுலாமிய சட்டம் ஆண்களுக்கு ஒரே நேரத்தில் நான்கு மனைவிகளாகக் கட்டுப்படுத்தியது, காமக்கிழத்திகள் தவிர. ( குர்ஆன் 4:3 ) [15][16] திருமணத்தின் அமைப்பு, பெண் ஓரளவு ஆர்வமுள்ள துணையாக இருந்ததாக மாற்றப்பட்டது. உதாரணமாக, வரதட்சணை, முன்பு தந்தைக்கு வழங்கப்படும் மணமகள் விலையாக கருதப்பட்டது. பின்னர் அது மனைவி தனது தனிப்பட்ட சொத்தின் ஒரு பகுதியாக வைத்திருக்கும் திருமண பரிசாக மாறியது' [14][16] இதன் பிறாகு இசுலாமிய சட்டத்தின் கீழ், திருமணம் என்பது ஒரு "நிலை" என பார்க்கப்படாது. ஆனால் ஒரு "ஒப்பந்தம்" எனக் கருத வேண்டும். திருமண ஒப்பந்தத்தின் இன்றியமையாத கூறுகள் இப்போது ஆணின் சலுகை, பெண்ணின் ஏற்றுக்கொள்ளல் மற்றும் வரதட்சணை கொடுப்பது போன்ற நிபந்தனைகள். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெண்ணின் சம்மதம் தேவைப்பட்டது. மேலும், குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் இது ஏற்பு செய்யப்பட வேண்டும்.[14][16][17] ஊக்குவித்தல்பல மதங்களைப் போலவே, இசுலாத்திலும் திருமணம் ஊக்குவிக்கப்படுகிறது. குடும்ப வாழ்க்கை ஒரு "ஆசீர்வாதம்" மற்றும் நிலைத்தன்மையின் ஆதாரமாக கருதப்படுகிறது.[18] ஒரு ஆதாரம் ஐந்து குர்ஆன் வசனங்களை பட்டியலிடுகிறது (கே.24:32, 25:74, 40:8, 30:21, 5:5) "ஒழுக்கமின்மையை ஊக்கப்படுத்த" திருமணத்தை ஊக்குவிக்கிறது.[19][20] பிபிசியின் இரண்டாம் நிலைக் கல்வி மத ஆய்வுகள், "முஸ்லிம்களுக்கு, குடும்ப வாழ்க்கை மற்றும் முழு சமூகத்திற்கும் ஒரு அடித்தளத்தை வழங்குவதற்காக அல்லாஹ்வால் திருமணம் உருவாக்கப்பட்டது" என்று கூறுகிறது.[18] நிபந்தனைகள்இசுலாத்தின் படி, ஆண்களும் பெண்களும் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபடும் போது,[21] கணவன் குடும்பத்தின் பாதுகாவலராகவும் ஆதரவாளராகவும் பணியாற்றும் போது, அவரது வழிகளில் இருந்து ஒருவரையொருவர் உரிமைகள் கொண்டுள்ளனர். [திருக்குர்ஆன் 4:34] மனைவியை விட கணவன் மேன்மையானவன் என்றும், மனைவியின் கீழ்ப்படிதல் கட்டுப்பாடானது என்றும் பல வர்ணனையாளர்கள் கூறியுள்ளனர்.[22] கணவன் தனது கடமைகளை நிறைவேற்றவில்லை என்றால், பெண்கள் குலா (விவாகரத்து) கோருவதில் எந்த களங்கமும் இல்லை என்பதையும் கூறுகிறது.[திருக்குர்ஆன் 4:128] [திருக்குர்ஆன் 4:19], பெண்ணுக்கான நீதி என்பது உணர்ச்சிபூர்வமான ஆதரவையும் உள்ளடக்கியது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது. மேலும் ஆண்களுக்கு பெண்களுக்கு வழங்கப்படும் மகர் அல்லது திருமண பரிசுகளை அவர்கள் பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டதாகக் கண்டறியப்படும் வரை திரும்பப் பெற முடியாது என்பதை நினைவூட்டுகிறது.[திருக்குர்ஆன் 4:19] . மகர் கொடுப்பதை ஒத்திவைக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட சந்தர்ப்பங்களில், சில கணவர்கள் தங்கள் மனைவிகளை வற்புறுத்துவார்கள். மேலும், திருமணத்தை கலைக்க ஒப்புக்கொள்வதற்கு அவர் கொடுத்ததைத் திருப்பித் தருமாறு வலியுறுத்துவார்கள். "கணவன் தவறாக நடந்து கொண்டாலோ அல்லது தன் பொறுப்புகளை புறக்கணித்துவிட்டாலோ, அவனிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு ஈடாக மனைவியின் சொத்தை எடுக்க அவனுக்கு உரிமை இல்லை. துரதிர்ஷ்டவசமாக, குர்ஆன் கூறினாலும், பெரும்பாலான தம்பதிகள் இந்த பிரச்சினைகளுக்கு நீதிபதியிடம் செல்ல மறுத்து, நடுவர் மன்றத்தையே நாடுகிறார்கள்: மகர், வரதட்சணை மற்றும் பரிசுகள்மகர் [23] என்பது திருமண வரதட்சணை அல்லது பரிசில் இருந்து வேறுபடுகிறது. இது ஒரு முஸ்லிம் திருமணத்திற்கு கட்டாயமாகும். மேலும், மணமகனால் மணமகளுக்கு வழங்கப்படுகிறது. மகரின் பணம் அல்லது உடைமையின் அளவு மணமகனால் மணமகளின் பிரத்தியேக பயன்பாட்டிற்காக திருமணத்தின் போது வழங்கப்படுகிறது.[24] மகர் என்பது பணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதற்கு பண மதிப்பு இருக்க வேண்டும். எனவே, "அன்பு, நேர்மை, உண்மையாக இருத்தல் போன்றவை நேர்மையாளர்களின் பண்புகளாக இருக்க முடியாது."[25] திருமண ஒப்பந்தத்தில் சரியான, குறிப்பிடப்பட்ட மகர் இருக்கவில்லை என்றால், கணவன் மனைவிக்கு நீதி ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்த வேண்டும்.[26] குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் மகர் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மணமகன் மகராக செலுத்தும் தொகைக்கு அதிகபட்ச வரம்பு இல்லை.[27] ஆனால் கணவர் இறந்துவிட்டாலோ அல்லது அவர்கள் விவாகரத்து செய்து கொண்டாலோ குறைந்தபட்சம் பெண் சுதந்திரமாக வாழ முடிந்தால் போதுமானது. "பெண்களுக்கு உரிய வரதட்சணைகளை, சமமாக வழங்க வேண்டும்." [25] என குர்ஆன் [4:4] கூறுகிறது. தடை செய்யப்பட்ட திருமணங்கள்![]() ஜாஹிலியா அரபு பாரம்பரியத்தின் சில பிரிவுகளில், மகன் தனது இறந்த தந்தையின் மற்ற மனைவிகளை (அதாவது தனது சொந்த தாய் அல்ல) மனைவியாகப் பெறலாம். குரான் இந்த நடைமுறையை தடை செய்தது.[28] பலதார மணம்இசுலாமியச் சட்ட முறைமைப்படி, முஸ்லிம்கள் பலமனைவி மணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். குர்ஆனின் கூற்றுப்படி, திருமணமாகாத அனாதை சிறுமிகளுக்கு அநீதி இழைக்கப்படும் என்ற அச்சம் இருந்தால் மட்டுமே ஒரு ஆண் சட்டப்பூர்வ நான்கு மனைவிகளைக் கொண்டிருக்கலாம். அப்போதும், கணவன் அனைத்து மனைவிகளையும் சமமாக நடத்த வேண்டும். இந்த நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று ஒரு மனிதன் பயந்தால், அவனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை அனுமதிக்க முடியாது. ஒரு மணமகள் தனது திருமண ஒப்பந்தத்தில் தனது கணவருக்கு ஒருதுணை மணம் தேவை அல்லது அவர் மற்றொரு மனைவியை திருமணம் செய்வதற்கு முன் அவரது சம்மதம் தேவைப்படும் என்ற விதிமுறைகளை சேர்க்கலாம். பலமனைவி மணம்பலமனைவி மணங்களில் கீழ்காணும் உறவுகளில் ஒருவன் திருமணம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
இத்தாஒரு பெண் விவாகரத்து செய்த பிறகு அல்லது கணவன் இறந்த பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு திருமணம் செய்து கொள்ள முடியாது. இந்த காலம் இத்தா என்று அழைக்கப்படுகிறது.
நவீன செயலாக்கங்கள்இன்றைய உலகில், இசுலாமியர்கள் இசுலாமிய திருமணச் சட்டங்களை உலகம் முழுவதும் பல வழிகளில் கடைப்பிடிக்கின்றனர். எடுத்துக்காட்டாக, அமெரிக்க ஐக்கிய நாடுகளில், சமூகக் கொள்கை மற்றும் புரிதலுக்கான நிறுவனம் 2012-இல் நடத்திய ஆய்வில் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட திருமணம் தேவை என்பதால் 95% அமெரிக்க முஸ்லிம் தம்பதிகள் நிக்காக் மற்றும் பொது திருமண உரிமம் ஆகிய இரண்டையும் பெற்றுள்ளனர்.[30] "சில சந்தர்ப்பங்களில், தம்பதியினர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தவுடன் இசுலாமிய திருமண ஒப்பந்தம் முடிவடைகிறது. ஆனால் திருமண வரவேற்புக்குப் பிறகு ஒன்றாக வாழ்வது நிகழ்கிறது." மற்ற சந்தர்ப்பங்களில், இசுலாமிய திருமண ஒப்பந்தம் பொதுவான திருமணத்துடன் ஒரே நேரத்தில் முடிக்கப்பட்டு, உடனடியாக திருமண வரவேற்புக்கு வரும். அமெரிக்கா மற்றும் ஆத்திரேலியா போன்ற நாடுகளில் இசுலாமியத் திருமண சட்டம் அங்கீகரிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து விவாதம் நடந்து வருகிறது. இது சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் திருமணமாக அங்கீகரிக்கப்படுவதை அனுமதிக்கும்.[31][32] மகர் அல்லது வரதட்சணை உள்ளிட்ட ஆய்வின்படி, இசுலாமிய திருமண சடங்குகளில் மற்ற கூறுகளும் உள்ளன. வரதட்சணை மறுக்கப்படும் பெண்களுக்கு அமெரிக்காவிலோ அல்லது கனடாவிலோ சட்டப்பூர்வ போட்டிக்கான தெளிவான பாதை இல்லை.[33] "மதத்தின் பால் அதிக ஈடுபாடில்லாதவர்கள்" என்று தங்களை விவரிக்கும் இளம் முஸ்லிம் அமெரிக்கர்கள் கூட தங்கள் நம்பிக்கையின் சடங்குகளை மாற்றத்தின் முக்கியமான தருணங்களில் - பிறப்பு, இறப்பு மற்றும் திருமணம் ஆகியவற்றைத் தழுவுகிறார்கள் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன. பள்ளிவாசலுக்குச் செல்வதன் மூலமோ, பிரார்த்தனை செய்வதன் மூலமோ அல்லது நோன்பு நோற்பதன் மூலமோ தங்கள் நம்பிக்கையைப் பின்பற்றாதவர்களுக்கும் கூட, உணர்ச்சி மற்றும் நடத்தைத் தொடுகைகளை மீண்டும் உறுதிப்படுத்த இந்த சந்தர்ப்பங்கள் தூண்டுகின்றன.[34] சான்றுகள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia