பகரைன், கனடா, சௌதி அரேபிய மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் இப்படையை தீவிரவாத அமைப்பில் சேர்த்துள்ளது.[12][13][14]
நோக்கம்
ஈரான் இராணுவம் நாட்டின் இறையாண்மையை காக்கும் வழக்கமான பணியில் செயல்படுகிறது. ஆனால் இசுலாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைகள், ஈரானின் அரசியலமைப்பு சட்டங்கள், பண்பாடு மற்றும் ஒருங்கிணைப்பையும் பாதுகாப்பதே முதன்மை நோக்கமாகும்.[15]
செயல்பாடுகள்
2024ஆம் ஆண்டில் இப்படையில் ஏறத்தாழ 1,25,000 பேர் உள்ளனர். இசுலாமிய புரட்சிகர கடற்படைப் பிரிவு, பாரசீக வளைகுடாவின் பாதுகாப்பிற்காக செயல்படுகிறது.[16] இதன் பிரிவுகளில் ஒன்றான பாஸ்ஜி எனும் புனிதப் படையில் 90,000 தன்னாலர்வர்கள் உள்ளனர்.[17][18] ஈரானுக்குள் இப்படை செப்பா செய்திகள் எனும் ஊடகத்தை நடத்துகிறது.[19]16 மார்ச் 2022 அன்று அணு நிலையங்களை பாதுக்காக்கும் புதுப் படைப்ப்பிரிவை புரட்சிகர பாதுகாப்பு படைகள் நிறுவியது.[20]
ஈரானிய அரசியல், இசுலாமியப் பண்பாடு மற்றும் சமூகத்தில் இசுலாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைகள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.[21] இஸ்ரேலுக்கு எதிராக புரட்சிகரப் படைகள் ஹமாஸ் மற்றும் ஹெஸ்புல்லா தீவிரவாத அமைப்புகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளிக்கிறது. மேலும் வளைகுடா நாடுகளில் நடைபெறும் உள்நாட்டுச் சண்டைகளில், புரட்சிகர பாதுகாப்பு படைகளின் தாக்கம் அதிகமாக உள்ளது.
மேற்கோள்கள்
↑ 1.01.1Abedin, Mahan (2011). "Iran's Revolutionary Guards: Ideological But Not Praetorian". Strategic Analysis35 (3): 381–385. doi:10.1080/09700161.2011.559965.
↑Rome, Henry (17 June 2020), "Iran's Defense Spending", The Iran Primer, The United States Institute for Peace, archived from the original on 22 June 2021, retrieved 23 August 2020
Azizi, Arash (November 2020). The Shadow Commander: Soleimani, the US, and Iran's Global Ambitions. New York: Oneworld Publications. ISBN9781786079442.
Alemzadeh, Maryam (2021). "The attraction of direct action: the making of the Islamic Revolutionary Guards Corps in the Iranian Kurdish conflict". British Journal of Middle Eastern Studies50 (3): 589–608. doi:10.1080/13530194.2021.1990013.
Hesam Forozan, The Military in Post-Revolutionary Iran: The Evolution and Roles of the Revolutionary Guards, c. 2017
Safshekan, Roozbeh; Sabet, Farzan, "The Ayatollah's Praetorians: The Islamic Revolutionary Guard Corps and the 2009 Election Crisis", The Middle East Journal, Volume 64, Number 4, Autumn 2010, pp. 543–558(16).