இசுலாமில் இயேசு
இசுலாம் மதத்தில் பார்வையில் இயேசு ஒரு இறைவாக்கினாராவார். இயேசு, அவரது தாய் மரியா வயிற்றில் புனிதமான குழந்தையாக உருவானதை புனித நூலான குரான் விளக்குகிறது. இயேசு இயற்கையாக மரணம் அடைந்தாரென்றும்,[சான்று தேவை] இறுதி உலக தீர்ப்பின் போது மீண்டும் உயிருடன் வருவாரென்றும் இசுலாம் பாரம்பரியம் நம்புகிறது. கிறித்த மதத்தின் மூவொரு இறைவன் கொள்கையை இசுலாம் நிராகரிக்கிறது. இயேசுவின் வாழ்க்கைபிறப்புகுரானில் இயேசுவை பற்றிய செய்தி, அவரது பிறப்பு அவரது தாய் மரியாவிற்கு, மதகுருவும் திருமுழுக்கு யோவானின் தந்தையுமான செக்கரியாவின் கீழ் எருசலேம் தேவாலயத்தில் தொண்டாற்றிக் கொண்டிருக்கும் போது முன்னறிவிக்கப்பட்டதிலிருந்து தொடங்குகிறது.[சான்று தேவை] மரியா தன் கன்னிதன்மையில் இயேசுவை கருத்தரித்தை குரான் விளக்குகிறது. கடவுள் தேவதூதர் கபிரியேல் வாயிலாக ஈசாவின்(இயேசு) பிறப்பை முன்னறிவிப்பதை குரான் விளக்குகிறது. தேவதூதர் மரியாளிடம் "நீ ஒரு மகனை பெற்றெடுப்பாய். அவருக்கு இயேசு என பெயரிடுவீர். அவர் மிகப்பெரிய இறைவாக்கினராய் இருப்பார்." என்றார். அதற்கு மரியா, "இது எப்படி நிகழும் நான் கன்னிபெண்ணாயிற்றே!" என்றாள். அதற்கு தேவதூதர், " அல்லாஹ், நினைத்தால் முடியாத காரியம் உண்டோ.[1][not in citation given] இதோ செக்கரியாவின் மனைவி தன் முதிர்ந்த வயதில் ஒரு மகனை கருத்தரித்திருக்கிறாள்." என்றார்.[2][not in citation given] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia