இடம் (இலக்கணம்)

தன்மை என்பது தமிழ் இலக்கண மூவிடங்களில் ஒன்றாகும். அம்மூவிடங்கள் தன்மை, முன்னிலை, படர்க்கை என்பனவாகும்.

மூவிடங்கள்

தன்மை

தன்மை என்பது பேசுபவரை, தன்னைக் குறிக்கின்ற ஓரிடம்.

'நானும் நீயும் உரையாடுவதை அவள் பார்த்துக்காெண்டிருக்கிறாள்'

மேலுள்ள சாெற்றாெடரில் 'நான்' என்பது பேசுபவரை, தன்னைக் குறிக்கின்ற ஓர் இடம் அதாவது தன்மை ஆகும்.

முன்னிலை

முன்னிலை என்பது முன்னிருந்து கேட்பவரைக் குறிக்கும் ஓரிடம்.

'நானும் நீயும் உரையாடுவதை அவள் பார்த்துக்காெண்டிருக்கிறாள்'

மேலுள்ள சொற்றொடரில் உள்ள 'நீ' என்பது பேசுபவருக்கு முன்னாலிருந்து கேட்பவரைக் குறிக்கின்ற ஓர் இடம் அதாவது முன்னிலை ஆகும்.

படர்க்கை

படர்க்கை என்பது பேசுபவராகவோ கேட்பவராகவோ அல்லாத சற்றுத் தாெலைவிலிருந்து கேட்பவரைக் குறிக்கும் இடம் ஆகும்.

'நானும் நீயும் உரையாடுவதை அவள் பார்த்துக்காெண்டிருக்கிறாள்'

மேலுள்ள சொற்றொடரில் உள்ள 'அவள்' என்பது பேசுபவரையும், முன்னிருந்து கேட்பவரையும் குறிக்காமல், தாெலைவிலிருந்து பார்ப்பவரைக் குறிக்கும் ஓர் இடம் படர்க்கை ஆகும்.

மூவிடப்பெயர்கள்

தன்மைப் பெயர்கள் - நான், யான், நாம், யாம், நாங்கள்.

முன்னிலைப் பெயர்கள் - நீ, நீர், நீவிர், நீயிர், நீங்கள், எல்லீர்.

படர்க்கைப் பெயர்கள் - அவன், அவள், அவர், அது, அவை.

தன்மை, முன்னிலைப் பெயர்கள், ஒருமையையும் பன்மையையும் உணர்த்துவன. படர்க்கைப் பெயர்கள் திணை, பால், எண் ஆகியவற்றை உணத்திவரும்.

"தன்மை யான்நான் யாம்நாம் முன்னிலை

எல்லீர் நீயிர் நீவிர் நீர் நீ

அல்லன படர்க்கை எல்லாம் எனல்பாெது [1] [2]

மேற்கோள்கள்

  1. (நன்: நுாற்பா: 285), புலவர் ச. சீனிவாசன், எம்.ஏ, வசந்தா பதிப்பகம், சென்னை - 88
  2. ஆறாம் வகுப்பு தமிழ்ப் பாடநுால் பக்க எண்கள்: 49, 50, தமிழ்நாட்டுப் பாடநுால் நிறுவனம், முதற்பதிப்பு - 1988.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya