இடையறா இயக்கம்இடையறா இயக்கம் (Perpetual motion) அல்லது நீடித்த இயக்கம் அல்லது தொடரியக்கம் எனும் இயற்பியல் கற்பனை எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் ஓர் இயக்கத்தைக் குறிக்கிறது. ஒரு முறை ஓர் இயந்திரம் ஆரம்பிக்கப்பட்ட பின் அது அப்படியே தொடர்ந்து காலகாலத்திற்கும் இயங்குவதென்பது இயலாது. ஆற்றல் அழிவின்மை விதியின் படி இது சாத்தியமாகாது. இடையறா இயக்க இயந்திரங்களை உருவாக்க வேண்டுமென்று எல்லாக் காலங்களிலும் அறிஞர்கள் முயன்றிருக்கிறார்கள். இன்னும் அந்த முயற்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. வகைகள்இடையறா இயக்க இயந்திரங்களை அவை வெப்பஇயங்கியலின் எந்த விதியை மீறுகிறது என்பதைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கலாம். முதல்வகை இடையறா இயக்க இயந்திரம்இவ்வகை இயந்திரம் சூனியத்தில் இருந்து ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இது அதைப் பயன்படுத்துவோருக்கு அளவற்ற ஆற்றலை அளிக்கிறது. இவ்வியந்திரம் ஆற்றல் அழிவின்மை விதியை மீறுகிறது.[1] இரண்டாம் வகை இடையறா இயக்க இயந்திரம்இவ்வியந்திரம் தானாகவே வெப்ப ஆற்றலை இயக்க ஆற்றலாக மாற்றும். இது ஆற்றல் அழிவின்மை விதியை மீறவில்லையெனினும் வெப்ப இயங்கியலின் இரண்டாம் விதியை மீறுகிறது. மூன்றாம் வகை இடையறா இயக்க இயந்திரம்இது உராய்வு போன்ற ஆற்றலை வீணாக்கும் சக்திகளைத் தவிர்த்து இயங்கும் இயந்திரம் ஆகும். ஆகவே ஒரு பந்தை உருட்டும் போது உராய்வு இருக்காதாயின் அப்பந்து தனது நிலைமத்தால் என்றென்றும் உருளும். ஆனால் இது வெப்ப இயங்கியலின் மூன்றாம் விதிக்கு எதிரானது. இவ்வகை இயந்திரங்களை உருவாக்க இயலாதாயினும்[2][3] உராய்வு போன்றவற்றை குறைக்க இயலும். மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia