இண்டியம்(III) செலீனைடு
இண்டியம்(III) செலீனைடு (Indium(III) selenide) என்பது In2Se3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இண்டியம் மற்றும் செலீனியம் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் ஒளிமின்னழுத்த சாதனங்களில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது. மேலும் விரிவான ஆராய்ச்சிகளுக்கும் இச்சேர்மம் உட்பட்டுள்ளது. α மற்றும் β நிலையிலுள்ள பொதுவான இரண்டு வடிவங்கள் அடுக்கு கட்டமைப்பு படிகங்களாகவும் γ வடிவம் ஊர்ட்சைட்டு படிகக் கட்டமைப்பிலும் காணப்படுகின்றன. ஒட்டு மொத்தமாக α, β, γ, δ, κ என்ற ஐந்து நிலைகளில் இண்டியம்(III) செலீனைடு அறியப்படுகிறது. [1] α- β நிலை மாற்றம் பொதுவாக ஒரு மின் கடத்துத்திறன் மாற்றத்துடன் சேர்ந்து நிகழ்கிறது. [2] γ- In2Se3 சேர்மத்தின் ஆற்றல் இடைவெளி தோராயமாக 1.9 எலக்ட்ரான் வோல்ட்டுகளாகும். ஓர் இண்டியம்(III) செலீனைடு மாதிரியின் படிக வடிவம் உற்பத்தி செய்யும் முறையைப் பொறுத்து அமைகிறது. எடுத்துக்காட்டாக, தூய்மையான γ-In2Se3 நிலையின் மெல்லிய படங்கள் உலோகக்கரிம நீராவிப் படிவு நுட்பங்களைப் பயன்படுத்தி மும்மெத்தில் இண்டியம் (InMe3) மற்றும் ஐதரசன் செலீனைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. [3] மேலும் காண்கமேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia