இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி
இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி இத்தாலியின் முன்னாள் அரசியல் கட்சியாகும். இக்கட்சி 1921 சனவரி 21 இல் இத்தாலிய சோசலிசக் கட்சியில் இருந்து பிரிந்து,[2] அமாடியோ போர்டிகா, அண்டோனியோ கிராம்ஷி ஆகியோரால் உருவாக்கப்பட்டது.[3] பாசிச ஆட்சியின் போது இது சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது. இத்தாலிய எதிர்ப்பு இயக்கத்தில் இக்கட்சி முக்கிய பங்கு வகித்தது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் இது இத்தாலியின் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்தது. 1970களில் மூன்றில் ஒரு பங்கு வங்கியை இது கொண்டிருந்தது. 1947 இல் 2.3 மில்லியன் உறுப்பினர்களுடன் மேற்குலகின் மிகப் பெரிய கம்யூனிஸ்டுக் கட்சியாக இருந்தது.[4] 1970கள் அல்லது 1980களில் கோட்பாட்டு பொதுவுடைமைத் தத்துவத்தில் இருந்து சனநாயக சோசலிசத்திற்கு மாறியது[5][6][7][8][9][10] 1991 இல், இது கலைக்கப்பட்டு இடது சனநாயகக் கட்சியாக மீண்டும் தொடங்கப்பட்டது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia