இந்தியக் குடியுரிமை![]() இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குடியுரிமை குறித்து அரசியல் சட்ட பிரிவுகள் 5 முதல் 11 வரை விளக்குகின்றன.[1] இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குடியுரிமை என்பது வரையறுக்கப்படவில்லை. குடிமகனுக்குக் கிடைக்கும் உரிமை குடியுரிமையாகும். குடிமகன் என்பவன் அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இதற்காக அவனுக்கு சில உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. குடிமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து அரசியல் உரிமைகளும் குடிமக்கள் அல்லாதவருக்கு வழங்கப்படமாட்டாது. குடிமகன் மட்டுமே வாக்காளராக இருக்க முடியும். நாட்டில் உயர்ந்த பதவிகளான குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர் போன்ற பதவிகளுக்கு குடிமக்கள் மட்டும் தான் வரமுடியும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 5 முதல் 11 வரை குடிமக்களைப் பற்றிக் கூறுகிறது. இந்திய குடியுரிமை சட்டம் 1955இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 11 குடியுரிமை குறித்த சட்டம் இயற்றுவதற்கு வகை செய்கிறது. இதனடிப்படையில் பாராளுமன்றம் இந்தியக் குடியுரிமை சட்டம் 1955 ஐ இயற்றியது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட காலத்திற்கு முன்பு இந்தியாவில் குடியிருந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வகை செய்கின்றது. அரசியல் சட்டம் இயற்றப்பட்ட பின் குடியுரிமை வழங்குவது குறித்து இந்தியக் குடியுரிமை சட்டம் 1955 வகை செய்கின்றது. அரசியலமைப்புச் சட்டம் இயற்றிய தேதியில் குடியுரிமை வழங்குவதுஅரசியலமைப்புச்சட்டம் 1950 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் தேதி அமலுக்கு வந்தது. அன்றைய தேதியில் குடியுரிமை வழங்குவதற்கான விதிகள் பின் வருமாறு.
அரசியலமைப்புச் சட்டத்திற்குப் பின் குடியுரிமை பெறுவதுகுடியுரிமை அடைதல்
வெளிநாட்டினர் குடியுரிமை கோரிப் பெறுதல்இந்தியக் குடியுரிமைச் சட்டம் முதலாம் அட்டவணையில் குறிப்பிடப்படாத நாட்டைச் சேர்ந்தவர், தேவையான தகுதிகள் பெற்றிருந்தால் அரசிற்கு மனுசெய்து குடியுரிமை கோரலாம். இந்திய நாட்டின் எல்லையை விரிவாக்குவதினால் குடியுரிமைஇந்திய நாட்டின் எல்லை விரிவாக்கத்தினால் அப்பகுதியில் வாழும் மக்கள் குடியுரிமைக்கு தகுதியானவர்கள் ஆகின்றனர். இந்திய அரசு இது குறித்த அறிக்கையை அரசிதழிலில் வெளியிட வேண்டும். இந்தியக்குடியுரிமை சட்டத்தின் 7 வது பிரிவு இதற்கு வகை செய்கிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia