இது மற்ற பூனை இனங்களை ஒப்பிடும்போது சிறியது, உருவத்தில் வீட்டுப்பூனையைப் போன்று தோற்றமளிக்கும். ஆனால் வீட்டுப் பூனையை விட பெரியது. மங்கிய மஞ்சல் கலந்த உடலும், அதன்மீது கரும்புள்ளிகளும் காணப்படும். இதன் வால் நீளமானது வாலின் பின்பகுதியில் கருவளையங்களும், இரண்டு கிடையான கருப்பு பட்டைகளும் காணப்படும். ஆண் பூனைகள் உடல் நீளம் 43 -91 செமீ (17 - 36 அங்குலம்) ஆகும். பொதுவாக வால் 23 முதல் 40 செமீ (9.1 -15.7 அங்குலம்) நீளம் இருக்கும். 5 முதல் 8 கிலோ (11 18 பவுண்டு) எடையுடனும் இருக்கும். பெண் பூனைகள் ஆண் பூனைகளைவிட சிறியதாக இருக்கும். பெண் பூனைகள் உடல் நீளம் 40 முதல் 77 செ.மீ (16-30 அங்குலம்) வால் 18 முதல் 35 செமீ (7.1 -13.8 அங்குலம்) நீளம் கொண்டவை. எடை 3 முதல் 5 கிலோ எடையுள்ளவை.[4]
↑ 3.03.1IUCN (International Union for Conservation of Nature) 2015. Felis silvestris. In: IUCN 2015. The IUCN Red List of Threatened Species. Version 2015.2. http://www.iucnredlist.org. Downloaded on 01 September 2015.