இந்தியப் பெருங்கடல் புவிவடிவத் தாழ்வு![]() ![]() இந்தியப் பெருங்கடல் புவிவடிவத் தாழ்வு (Indian Ocean Geoid Low, IOGL) என்பது இந்தியப் பெருங்கடலில் உள்ள ஈர்ப்பு விசை ஒழுங்கின்மை அல்லது ஈர்ப்புத் துளை ஆகும். இந்தியத் துணைக்கண்டத்தின் தெற்கே அமைந்துள்ள புவியின் புவிவடிவத்தில் உள்ள ஒரு வட்டப் பகுதி, பூமியின் மிகப்பெரிய ஈர்ப்பு ஒழுங்கின்மை ஆகும்.[1][2] இது கடல் மட்டத்தில் சுமார் 3 மில்லியன் கிமீ2 (1.2 மில்லியன் சதுர மைல்) பரப்பளவைக் கொண்டிருக்கும், கிட்டத்தட்ட இந்தியாவின் அளவு கொண்ட ஒரு தாழ்வு மண்டலமாக உருவாகிறது. இது 1948 ஆம் ஆண்டில் டச்சு புவி இயற்பியலாளர் பெலிக்சு ஆண்ட்ரீசு வெனிங் மெய்னெசு என்பவரால் கப்பலின் ஈர்ப்பு விசையின் ஆய்வு மூலமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும், இது மே 2023 வரை ஒரு மர்மமாகவே இருந்தது. வலுக்குறைந்த உள்ளூர் ஈர்ப்பு விசை கணினி உருவகப்படுத்துதல்களாலும் நில அதிர்வுத் தரவுகளைப் பயன்படுத்தியும் அனுபவபூர்வமாக விளக்கப்பட்டது.[3] அமைவிடம், பண்புகள், உருவாக்கம்இந்தப் புவியீர்ப்பு ஒழுங்கின்மை, அல்லது ஈர்ப்புத் துளை, இலங்கை, மற்றும் இந்தியாவின் பெருநிலப்பரப்பின் தென்முனையில் உள்ள கன்னியாகுமரியின் தென்மேற்கிலும், ஆப்பிரிக்காவின் கொம்புக்குக் கிழக்கேயும் மையமாகக் கொண்டுள்ளது. வலுக்குறைந்த உள்ளூர் ஈர்ப்பு விசையின் காரணமாக, இந்தியப் பெருங்கடலில் அலைகள், நீரோட்டங்கள் போன்ற சிறிய விளைவுகள் இல்லாவிட்டால், இந்த ஈர்ப்புத் துளையில் உள்ள கடல் மட்டமானது உலகளாவிய சராசரி கடல் மட்டத்தை விட (நோக்கீட்டு நீள்கோளம்) 106 மீட்டர் (348 அடி) வரை குறைவாக இருக்கும்.[4][5] மில்லியன் கணக்கான ஆண்டுகளாகச் செயல்படும் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பின் அடிப்படையில், "ஈர்ப்புத் துளை" என்பது இந்தியாவிற்கும் நடு ஆசியாவிற்கும் இடையிலான குறுகலான இடைவெளியில் மிகவும் பழமையான தேத்திசுப் பெருங்கடலின் மூழ்கிய தளத்தின் துண்டுகளால் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது, ஏனெனில் மூழ்கும் துண்டுகள் பூமியின் உட்புறத்தில் இருந்து குறைந்த அடர்த்தி கொண்ட சூடான கற்குழம்பின் மூடக புளூம்களால் ஈடுசெய்யப்பட்டன.[1][3] இந்த குறைந்த அடர்த்தியின் காரணமாக, ஈர்ப்புத் துளைப் பகுதியில் உள்ள ஈர்ப்பு விசை இயல்பை விட சுமார் 50 mgal (0.005%) வலுக்குறைவாக உள்ளது,[6] இது பூமியின் மிகப்பெரிய புவியீர்ப்பு ஒழுங்கின்மை ஆகும். ஈர்ப்புத் துளையானது ஏறத்தாழ 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக நம்பப்படுகிறது.[1][3] மேற்கோள்கள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia