இந்தியாவில் உள்ள தீர்ப்பாயங்கள்

இந்தியாவில் பல்வேறு நிர்வாகவாக மற்றும் வரி தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் தீர்ப்பாயங்கள் உள்ளன. குறிப்பாக மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (CAT), வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ITAT), சுங்க வரி, மசோதா மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (CESTAT), தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT), போட்டி மேல் முறையீடு தீர்ப்பாயம்(COMPAT) மற்றும் பாதுகாப்பு மேல் முறையீட்டு தீர்ப்பாயம் (SAT) போன்ற மேலும் பல தீர்ப்பாயங்கள் உள்ளன.[1]

பல மாநிலங்களில், உணவு பாதுகாப்பு மேல்முறையீட்டு தீர்பாயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது உணவு பாதுகாப்பு குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளுக்கு எதிராக முறையீடு செய்ய உருவாக்கப்பட்டுள்ளன.

ஆயுதப்படைத் தீர்ப்பாயம் (AFT) இந்தியாவில் உள்ள இராணுவ தீர்பாயமாகும். இது ஆயுதப்படைச் சட்டத்தின் கீழ் 2007 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[2][3][4]

மேற்கோள்கள்

  1. "Government to restructure tribunals, autonomous organisations", தி எகனாமிக் டைம்ஸ், 21 February 2016
  2. Armed Forces Tribunal Act and Rules – Army Navy Air-Force, archived from the original on 2014-11-07, retrieved 2017-07-16
  3. Armed forces tribunal remains 'toothless' as serving officers stay outside its jurisdiction
  4. Armed Forces Tribunal, archived from the original on 2014-11-07, retrieved 2017-07-16
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya