இந்தியாவில் தொடருந்து போக்குவரத்து![]() இந்தியாவில் நெடுந்தொலைவுப் பயணங்களுக்கு இரயில் போக்குவரத்தே முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. இரயில் போக்குவரத்தானது இந்திய இரயில்வே என்ற அரசு நிறுவனத்தினால் ஆளப்படுகிறது. இரயில் பாதைகள் நாடு முழுதும் பரவியுள்ளது. இதன் மொத்த நீளம் 66930 கிலோமீட்டர்கள் ஆகும். இது உலகின் மிகப் பெரிய இரயில் வலையமைப்புகளில் ஒன்று ஆகும். இது ஆண்டொன்றுக்கு 500 கோடிக்கும் அதிகமான மக்களையும் 350 மில்லியன் டன்களுக்கு அதிகமான சரக்கையும் இடம்பெயர்க்கிறது. இது 28 மாநிலங்களிலும் மூன்று யூனியன் பிரதேசங்களிலும் செயல்படுகிறது. மேலும் இது அண்டை நாடுகளான நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்றவற்றையும் இணைக்கிறது. ![]() ![]() ![]() ![]() வரலாறு இந்தியாவில் இருப்புப்பாதைக்கான திட்டம் 1832ஆம் ஆண்டில் வரையப்பட்டது. 1836 இல் முதல் இருப்புப் பாதை தற்போதைய சென்னையின் சிந்தாதிரிப்பேட்டை பாலம் அருகே சோதனையோட்டமாக அமைக்கப்பட்டது.[1][2] 1837இல் செங்குன்றம் ஏரிக்கும் செயின்ட்.தாமசு மவுண்ட்டின் (பரங்கிமலை) கற்சுரங்கங்களுக்கும் இடையே 3.5-மைல் (5.6 km) தொலைவிற்கு இருப்புப் பாதை நிறுவப்பட்டது.[3] 1844இல் அப்போதைய கவர்னர் ஜெனரல் என்றி ஆர்டிஞ்ச் தனியார்த்துறையினரும் இருப்புப் பாதைகள் அமைக்க அனுமதித்தார். 1845-ல் ராஜமுந்திரி அருகே , கோதாவரி ஆற்றின் குறுக்கே தவலேஸ்வரம் தடுப்பணை கட்டுமானப் பணிகளுக்காக இருப்புப் பாதை அமைக்கப்பட்டது. பயணிகளுக்கான இரயில் சேவையானது இந்தியாவில் முதலில் மும்பை மற்றும் தாணே இடையே 1853-இல் அறிமுகப்படுத்தப்பட்டது[4]. 1947-இல் நாடு விடுதலை அடைந்த போது மொத்தம் 42 தொடர்வண்டி அமைப்புகள் இருந்தன. பின்னர் 1951-இல் இது நாட்டுடமையாக்கப்பட்ட போது இது உலகின் பெரிய தொடர்வண்டி அமைப்புகளில் ஒன்றாக ஆனது.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia