இந்தியாவில் பவளப் பாறைகள்![]() இந்தியாவில் பவளப் பாறைகள் (Coral reefs in India) என்பவை மிகப் பழமையான மற்றும் ஆற்றல் மிக்க சூழல்தொகுதிகளில் ஒன்றாகும். கணக்கிலடங்கா கடல்வாழ் உயிரினங்களுக்கு இவை ஒரு சரணாலயமாக இருப்பதோடு மட்டுமில்லாமல் கடற்கரையை கடலரிப்பில் இருந்து காப்பதில் மிகமுக்கியப் பங்காற்றுகின்றன. இந்தியா சுமார் 8000 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையைக் கொண்டிருக்கிறது. பட்டியல்அந்தமான் நிகோபார் தீவுகள்வங்காள விரிகுடாவில் இத்தீவு அமைந்துள்ளது. குறிப்பாக கடலோரப் பாறைத்தொடர் பவளப்பாறைகள் கொண்ட 500 தீவுகளைக் கொண்டுள்ளது. பெரும்பாலான தீவுகளில் உயிரியல் பல்வகைமை ஆரோக்கியமானதாக இருக்கிறது.[1] கட்சு வளைகுடாபிரத்தியேகமாக கடலோரப் பாறைத்தொடர் பவளப்பாறைகள் இத்தீவில் உள்ளன. உயர் உவர்ப்புத் தன்மை மற்றும் உயர் வெப்பநிலை மாறுபாடுகள் காரணமாக இங்குள்ள பவளப்பாறைகள் ஒப்பீட்டளவில் குறைவான வளர்ச்சியையே பெற்றுள்ளன. துறைமுகங்களில் பல்லுயிர்ப் பெருக்கம் குறைவான அளவில் காணப்படுகிறது. கட்சு வளைகுடா முழுவதுமே கடல்சார் தேசிய பூங்காவாகவும் கருதப்படுகிறது.[2] மன்னார் வளைகுடாவடக்கில் இராமேசுவரம் முதல் தெற்கில் தூத்துக்குடி வரை சங்கிலித் தொடராக அமைந்துள்ள 21 தீவுகள் தீவோரப் பவளப்பாறைகளைக் கொண்டிருக்கின்றன. வளைகுடாவின் இப்பகுதி மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்காவாக உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.[3] இலட்சத்தீவுகள்தனிப்பட்ட பவளப் பாறைகளால் ஆன 36 பவளத் தீவுகளைக் கொண்டுள்ளது. இவற்றில் பத்து தீவுகளில் மனிதர்கள் வசிக்கின்றனர். தீவுகள் குறைந்தபட்சம் ஒரு கிலோமீட்டர் முதல் ஒன்பது கிலோமீட்டர் வரையிலான நீளம் கொண்டு அதிகபட்சமாக இரண்டு கிலோமீடருக்கு மிகாத அகலம் கொண்டவையாக இருக்கின்றன.[4] மற்றவைமகாராட்டிராவின் சிந்துதுர்கா மாவட்டத்தில் உள்ள மால்வன் தாலுக்காவில் இருக்கும் தார்கர்லி கிராமத்தில் மிகச்சிறிய பவளப் பாறை, விசயதுர்கையில் உள்ள ஆங்கிரியா கடற்கரை, கர்நாடகாவில் உள்ள நேத்ரானி தீவு போன்றவை இந்தியாவிலுள்ள மற்ற பவளப் பாறைகளாகும். மேற்கோள்கள்
படக்காட்சியகம்
இவற்றையும் காண்கஉசாத்துணை |
Portal di Ensiklopedia Dunia