இந்திய உணவுமுறைஇந்திய உணவுமுறை என்பது இந்திய நாட்டின் உணவு பழக்கவழக்கங்கள், சமையல் முறைகள் பற்றிய தொகுப்பாகும். ஒரு நாட்டின் உணவு பழக்கவழக்கமானது அந்த நாட்டின் மண்வளம், பருவநிலை மாற்றம், கலாச்சாரம், தொழில்கள், பயிரிடப்படும் காய்கறிகள், பழங்கள், வாசனைப்பொருட்கள் ஆகியவற்றை பொறுத்து அமையும். வரலாறுஇந்திய நாட்டின் உணவு பழக்கவழக்கங்கள் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது. பிற நாட்டவர்களின் படையெடுப்பால் இந்திய உணவு கலாச்சாரம் பல நாட்டவர்கள் உணவு கலாச்சாரத்தையும் தன்னகத்தே உள்வாங்கியுள்ளது.[1][2] வட்டார உணவுமுறைகள்அந்தமான் நிக்கோபர் தீவுகள்அந்தமான் நிக்கோபர் தீவுகளை பொறுத்தவரை கடல்சார் உணவுகளை பெரிதும் உண்ணுகின்றனர்.[3] ஆந்திரபிரதேசம்![]() ஆந்திராவை பொறுத்தவரை அரிசி முதன்மை உணவாகும். கடல்சார் உணவுகள் கடலோர மாநில மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகிறது. புளி அன்றாட சமையலில் பயன்படுத்தப்படுகிறது.காலை உணவாக இட்லி, தோசை ஆகியவை உண்ணப்படுகின்றது. அருணாச்சலபிரதேசம்அருணாச்சலபிரதேச மக்கள் அரிசியை மீன், கீரை மற்றும் மாமிச உணவுகளோடு உணவாக உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.[4] இலைக்கோசு முக்கிய தாவர உணவாகும். இது இஞ்சி, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் உடன் கொதிக்க வைத்து உண்ணப்படுகிறது.[5] இலைகள் மூடப்பட்டு வேகவைத்த அரிசி கேக்குகள் இங்கு ஒரு பிரபலமான சிற்றுண்டி. அருணாச்சல பழங்குடியினர் தங்கள் உணவை செய்ய மீன், முட்டை, மாட்டிறைச்சி, கோழி, பன்றி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி பயன்படுத்துகின்றனர். புளிக்க நெல் அல்லது தினை இருந்து தயாரிக்கப்படும் அபாங் அல்லது அரிசி பீர் அருணாசலப் பிரதேச மக்களால் ஒரு பிரபலமான பானம் மற்றும் ஒரு புத்துணர்ச்சி பானம் என உட்கொள்ளப்படுகிறது. பீகார்கரம் மசாலா, உருளைகிழங்குடன் சேர்த்து சமைக்கப்படும் ஆட்டிறைச்சி இங்கு பிரசிதிப்பெற்றது. சண்டிகர்சண்டிகர் 20 ஆம் நூற்றாண்டில் உருவான ஒரு நகரம் என்றாலும் இங்கு ஒரு நவநாகரிக உணவு பண்பாடு உள்ளது. சோள மாவு (மக்கீ) இருந்து தயாரிக்கப்படும் ரொட்டி போன்ற பஞ்சாபி உணவுகள் இங்கு புகழ்பெற்ற உணவு. சத்தீஸ்கர்சத்தீஸ்கர் மக்களின் முக்கிய உணவு அரிசி. சத்தீஸ்கர் மாநில பஸ்தர் பகுதியில் பழங்குடி மக்கள் காளான்கள், அணில், மூங்கில் ஊறுகாய், மூங்கில் காய்கறிகள் முதலியவற்றை முக்கிய உணவாகக் கொண்டுள்ளனர். மகாவா பூவிலிருந்து கிடைக்கும் சூடான மதுபான வகைகள் இங்கு பிரபலம். தமிழ்நாடுதமிழநாட்டை பொறுத்தவரை அரிசி முதன்மை உணவாகும். இவர்கள் சைவ மற்றும் அசைவ உணவுகளை உட்கொள்கின்றனர். கறிவேப்பிலை, புளி, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, மிளகாய், மிளகு, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சாதிக்காய், தேங்காய் ஆகியவை தமிழர் சமயலில் அன்றாடம் இடம் பிடிப்பவை. மதிய உணவாக சோறுடன், குழம்பு மற்றும் கூட்டு வகையுடன் உண்கின்றனர். குழம்பாக சாம்பார், இரசம், மோர், வெறும் கறி(தேங்காய் குழம்பு) பயன்படுத்தப்படுகின்றன. கூட்டாக அவியல், பொரியல், அப்பளம், ஊறுகாய் போன்றவை உண்ணப்படுகின்றன. காலை உணவாக இட்லி, தோசை, ஆப்பம், புட்டு, ரவை, பொங்கல் ஆகியவை உண்ணப்படுகின்றது. கேரளம்கேரளா மக்கள் அரிசியை முதன்மை உணவாகக் கொண்டுள்ளனர். மீன் மற்றும் கடல்சார் உணவுப் பொருட்கள் கேரள உணவு கலாச்சாரத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. சாளை, கிளாத்தி, பார்ப்பவர் மீன், கிங் மீன், வாவல், இறால், நெத்திலி, கிளி மீன் முதலிய மீன் வகைகளும், சுரப்பிகள், சிப்பிகள், நண்டுகள், மீன், நத்தை முதலிய கடல்சார் உணவுப் பொருட்களும் மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. தென்னிந்திய உணவுவகைகளில் முக்கிய இடம் வகிக்கும் கேரள உணவு வகைகளில் தேங்காய் இன்றியமையாததாகும். தேங்காயின் உபப் பொருட்களான எண்ணெய், பால், தேங்காய்த்துருவல், கொப்பரை, இளநீர், போன்றவை சுவைக்கூட்டாக பயன்படுத்தப் படுகின்றன. இட்லி, தோசை, ஆப்பம், புட்டு போன்றவை பிரசிதிப் பெற்ற காலை உணவுகளாகும். கருநாடகம்கர்நாடக உணவுமுறை, கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலும் சமூகங்களிலும் உள்ள பாரம்பரிய உணவு வகைகளைக் குறிப்பதாகும். இதில் வடகர்நாடக உணவு, தென்கர்நாடக உணவு, உடுப்பி சமையல், சரஸ்வத் உணவு, குடகு சமையல், மங்களூர் கத்தோலிக்க உணவு மற்றும் நவயத் உணவுகள் அடங்கும்.[6][7] லட்டுமுதன்மைக் கட்டுரை: லட்டு இது பருப்பு மாவில் இருந்து பந்து போல் செய்யப்பட்டு பின்னர் சர்க்கரைப்பாகில் நனைத்து உருண்டையாக ஆக்கப்படுகின்றன. இது செய்வதற்கு எளிதாகையால் மிகவும் பரவலாக வீடுகளில் செய்யப்படுகிறது. ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia