இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (Social Democratic Party of India) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இது இசுலாமியர், தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக செயல்பட்டு வருகிறது. இந்த கட்சியானது 2009 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 அன்று தொடங்கப்பட்டது.[1][2] இது தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் (பிஎஃப்ஐ) அரசியல் பிரிவாகக் கருதப்படுகிறது.[3][4][5][6][7]
தேர்தல் பங்களிப்பு
தமிழ்நாடு
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஐந்து தொகுதியில் போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 இல் திமுக கூட்டணியில் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ) இணைந்து போட்டியிடும் என்று அறிவித்தது.[9].பின்னர் ஏப்ரல் 7 அன்று திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டாமல் கூட்டணியில் இருந்து விலகியது.[10] எஸ்.டி.பி.ஐ கட்சியானது 30 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் அப்போதைய தமிழ் மாநில தலைவர் தெகலான் பாகவி அறிவித்தார்.[11] 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணியின்றி போட்டியிட்து அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.
2021 தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.[13]
2021 சட்டமன்ற தேர்தல்
போட்டியிட்ட தொகுதிகள்
வேட்பாளர் பெயர்
வாக்குகள்
வாக்கு %
ஆம்பூர்
உமர் பாரூக்
1,793
1.01
ஆலந்தூர்
முகமது தமின் அன்சாரி
1,761
0.74
திருச்சிராப்பள்ளி மேற்கு
அப்துல்லா ஆசன்
2,545
1.39
திருவாரூர்
நசிம் பானு
6,364
3.06
மதுரை மத்தி
சிக்கந்தர் பாசா
3,347
2.24
பாளையம்கோட்டை
முகமது முபாரக்
12,241
7.6
புதுச்சேரி
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் 2016
புதுச்சேரி ஒன்றிய பகுதியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.
2015 ஆன்று நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி 32 கிராம ஊராட்சி வார்டுகள், 7 நகராட்சி வார்டுகள், ஒரு நகராட்சி வார்டு என 40 இடங்களில் வென்றது. 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் இக்கட்சி 75 கிராம ஊராட்சி வார்டுகள், 1 ஒன்றிய கிராம ஊராட்சி வார்டு, 18 நகராட்சி வார்டுகள், 1 மாநகராட்சி வார்டு என 95 இடங்களில் வென்றது.[15]
கேரளா சட்டமன்றத் தேர்தல், 2011
2011 கேரளா சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து 80 தொகுதிகளில் போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.
பிகார் மாநில சட்டமன்றதேர்தலில் எஸ்.டி.பி.ஐ.கட்சி பப்பு யாதவின் ஜான் அதிகார் கட்சி தலைமையிலான முற்போக்கு ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தது. இந்த கூட்டணியில் சந்திரசேகர ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சி, பகுஜன் முக்தி கட்சி,முசுலிம் அரக்ஷ்ன் மோர்ச்சா கட்சியும் அங்கம் வகித்தன. இந்த கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி 14 தொகுதியில் போட்டியிட்டது.[18]