இந்திய நில அளவைத் துறைஇந்திய நில அளவைத் துறையானது (Survey of India) வரைபடம் தயாரித்தல் மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் நடுவண் பொறியியல் முகமை ஆகும். இது 1767 ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தாரால் அவர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளை அளந்து தொகுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.[1] இது இந்திய அரசின் மிகப் பழமையான பொறியியல் துறைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. வில்லியம் லாம்டன், ஜார்ஜ் எவரஸ்ட் ஆகியோரால் நடத்தப்பட்ட பெரிய இந்திய நெடுவரை வில்மாபெரும் முக்கோணவியல் நில ஆய்வு மற்றும் எவரெஸ்டு சிகரம் கண்டுபிடிப்பு ஆகிய சிறப்பு வாய்ந்த வரலாற்றினை இத்துறைக் கொண்டுள்ளது.[1] இத்துறையின் உறுப்பினர்கள் இந்தியக் குடியியல் பணிகள் துறைக்கு ஈடான இந்திய ஆய்வுச் சேவையைச் சார்ந்தவர்களாவர். இது இந்தியத் தலைமை அளவையாளரின் கீழ் செயல்படுகிறது. வரைபடங்கள்![]() இந்திய நில அளவைத் துறை வரைபடங்களை வெளியிடுகிறது. தடைசெய்யப்படாத வகையினைச் சேர்ந்த வரைபடங்களை இத்துறையைச் சார்ந்த புவி-வெளி மையங்களில் நியாயமான விலைகளில் பெற முடியும். வரையறுக்கப்பட்ட வகையிலான வரைபடங்களுக்கு அரசாங்க அதிகாரிகளிடமிருந்து அனுமதி தேவை. இந்திய நில அளவைத் துறை வரைபடங்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டு வேறு பல விதிகளுக்குட்பட்டது. ஒரு இந்தியக் குடிமகன் மட்டுமே நில வரைபடங்களை வாங்க முடியும். எந்தக் காரணத்திற்காகவும் இது இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படக்கூடாது. வரலாறுஇந்திய நில அளவைத் துறையின் வரலாறு 18ஆம் நூற்றாண்டிற்கும் முந்தையது. அ) முதல் இந்திய ஆய்வு பாரா மகால் : தற்போதைய தர்மபுரி, [[கிருஷ்ணகிரி மற்றும் வடக்கு ஆற்காடு ஆகியவை பாரா மகால் என்று அழைக்கப்பட்டன. சேலம் மற்றும் பாரா மகாலின் மேற்பார்வையாளரான கார்டினல் அலெக்சாண்டர் ரீடு என்பார் சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் சமூகப்பொருளாதார ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த ஆய்வு 1793 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் டபிள்யு. மாதர் தலைமையின்கீழ் ஆரம்பித்து 1796 ஆம் ஆண்டளவில் நிறைவு செய்யப்பட்டது. (Reference : Baramahal records Vol.I P.220)) 04.10.1797 தேதியிட்ட கடிதத்தில், பிரித்தானிய அரசாங்கத்தால் கார்டினல் அலெக்சாண்டர் ரீடு பாராட்டப்பட்டார். பெரிய இந்திய நெடுவரை வில் ஆய்வு 1802 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் பிரித்தானிய நில அளவையாளர் கார்டினல் வில்லியம் லாம்டனால் தொடங்கப்பட்டது. இது சென்னையில் புனித தோமையார் மலையில் இருந்து இமயமலை அடிவாரம் வரை நடத்தப்பட்டது. 12 கி.மீ. அடிப்படை கோடு அளவிட 57 நாட்கள் எடுத்துக் கொண்டது. 36 அங்குல பெரிய ½ டன் எடைகொண்ட தியோடோலைட்டு அளவிடப் பயன்படுத்தப்பட்டது. இந்த 5-பத்தாண்டுகள் திட்டம் சர்வே ஜெனரல் லெப்டினண்ட் ஜார்ஜ் எவரெஸ்டால் 1852 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. நில அளவையாளர் ராதாநாத் சிக்தார் 1852 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை 29,002 அடி உயரம் என்று அளந்தார். நவீன அளவீடுகள் உயரம் 29,037 அடி குறிக்கிறது. இது இந்தியாவில் திட்டமிடப்பட்ட நிலப்பரப்பு வரைபடத்தின் தொடக்கமாகவும், உலகின் பழமையான கணக்கெடுப்பு மற்றும் வரைபட முகமையாகவும் கருதப்படுகிறது. அமைப்புடேராடூனைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய நில அளவைத் துறையானது, 18 சிவில் பொறியியல் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இப்பிரிவுகள் அலைகளின் கணிப்பு முதல் வான்வெளி ஆய்வு வரையிலான பணிகளை மேற்கொள்கின்றன. இது இந்தியா முழுவதும் 23 புவி-வெளித் தரவு மையங்களைக் கொண்டுள்ளது. இவை அதனதன் நிர்வாக பகுதிக்குரிய ஆய்வுப் பணிகளை மேற்கொள்கின்றன. நில அளவையாளர்கள் இத்துறையின் முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். இத்துறைக்கான பொறியியல் அலுவலர் பணியிடங்கள், நடுவண் அரசின் பணியாளர் தேர்வு வாரியத்தால் (UPSC) நடத்தப்படும் இந்தியப் பொறியியல் பணிக்கான போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பப்படுகின்றன. இத்துறையின் முக்கியமான சிவில், மின்னியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளர் பணியிடங்கள் பின்வறுமாறு:
நோக்கம்நாட்டின் பாதுகாப்பு, நிலையான நாட்டு வளர்ச்சி மற்றும் புதிய தகவல் சந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், பயனீட்டாளருக்கான, செலவு குறைந்த, நம்பகமான மற்றும் தரமான புவிசார் தரவு, தகவல் மற்றும் புலனாய்வு ஆகியவற்றை வழங்குவதில் தலைமைத்துவ பங்காற்றுதலே இந்திய நில அளவைத் துறையின் நோக்கமாக உள்ளது. குறிக்கோள்ஆய்வுக் கோட்பாடு, நடைமுறை, சேகரிப்பு மற்றும் புவியியல் தரவுகளின் பயன்பாடு ஆகியவற்றின் முன்னேற்றத்திற்கும், அண்மைக்காலச் சூழலில் மலிவு விலையில் உயர்ந்த சாத்தியமிக்க தரமான தரவுகளை பெறக் கூடிய வகையில், தரவு உற்பத்தியாளர்கள் மற்றும் பயனீட்டாளர்களிடையே தகவல், கருத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பப் புதுமைகள் ஆகியவற்றின் செயல்திறன் மிக்க பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்கும் இந்திய நில அளவைத் துறை தன்னை அர்ப்பணிக்கிறது. செயல்பாடுகள்இந்திய நில அளவைத் துறையானது, அனைத்து விதமானஆய்வுகளிலும் இந்திய அரசுக்கு ஆலோசகராக செயல்படுகிறது. இதன் முக்கிய கடமைகள் மற்றும் பொறுப்புகள் பின்வருமாறு:
இதனையும் காண்கமேற்கோள்கள்Resources
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia