இந்திய பஞ்சாபில் சுற்றுலா![]() ![]() ![]() ![]() பஞ்சாபு மாநிலம் தனது உணவு, பண்பாடு, வரலாறு, இசைக்காக புகழ்பெற்ற மாநிலமாகும். இந்த மாநிலத்தில் தொலைத்தொடர்பு வசதிகளும் போக்குவரத்தும் சிறப்பாக உள்ளது. பஞ்சாபின் முதன்மை நகரங்களாக அமிருதசரசு, ஜலந்தர், பட்டியாலா, பட்டான்கோட், லூதியானா உள்ளன. பஞ்சாபின் பொதுப் போக்குவரத்து சுற்றுலா மையங்களுக்கு எளிதில் செல்லும் விதத்தில் செயல்படுகிறது. பழங்கால அரண்மனைகள் , பழங்கால போர்க்களங்கள், ஆன்மீக ஸ்தலங்கள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவருவதாய் அமைந்துள்ளது. இங்கு சீக்கியம், இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தவர் வசிக்கின்றனர். மெய்யான பஞ்சாபிப் பண்பாட்டை அறிய விரும்பும் சுற்றுலாப் பயணிகள் இம்மாநில சிற்றூர்களில் தங்கி அழகான இந்திய இல்லங்களையும் பண்ணைகளையும் கோயில்களையும் கண்டு களிக்கலாம். லோன்லி பிளானட்டின் 2008ஆம் ஆண்டு நீலப்பட்டியலில் பொற்கோவிலை உலகின் ஆன்மீகச் சுற்றுலாவிடங்களில் மிகச் சிறந்ததாகத் தேர்ந்தெடுத்துள்ளது. இங்கு நாளும் 100,000 சமயப் பயணிகளும் சுற்றுலாப் பயணிகளும் வருகை புரிகின்றனர். அமிருதசரசில் பல ஐந்து நட்சத்திர தங்குவிடுதிகள் உள்ளன.[1][2][3] வாகா எல்லைவாகா (பஞ்சாபி (குர்முகி): ਵਾਹਗਾ, Hindi: वाघा, Urdu: واہگہ) என்ற சிற்றூர் பெரும் தலைநெடுஞ்சாலையில் இந்தியப் பஞ்சாபின் அமிருதசரசிற்கும் பாக்கித்தானியப் பஞ்சாபின் இலாகூருக்கும் இடையே பாக்கித்தானிற்கும் இந்தியாவிற்குமான எல்லையில் அமைந்துள்ளது. இங்கு சரக்குமாற்று முனையமும் தொடருந்து நிலையமும் உள்ளன. இலாகூரிலிருந்து 24 கி.மீ. (15 மை) தொலைவிலும் அமிருதசரசிலிருந்து 32 கி.மீ. (20 மை) தொலைவிலும் அமைந்துள்ளது. அண்மித்த இந்தியச் சிற்றூர் அட்டாரி 3கி.மீ. (1.9)மைல்களில் உள்ளது. இங்கு நடக்கும் விரிவான எல்லைச் சடங்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது. கதிரவன் மறைவிற்கு இரண்டு மணி நேரம் முன்பாக ஒவ்வொருநாளும் எல்லை வாயிலில் உள்ள கொடிக்கம்பத்திலிருந்து அவரவர் நாட்டுத் தேசியக் கொடிகள் இறக்கப்படுகின்றன. கோட்டைகள் மற்றும் அரண்மனைகள்
முகலாயக் கட்டிடக்கலை
ஆன்மீக ஸ்தலங்கள்
கோயில்கள்
பூங்காக்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia