இந்திய பெருங்கடல் வர்த்தகம்![]() இந்திய பெருங்கடல் வர்த்தகம் (Indian Ocean trade) என்பதுவரலாறு முழுவதும் கிழக்கு-மேற்கு வர்த்தக பரிமாற்றங்களில் ஒரு முக்கிய காரணியாக இருந்துள்ளது. கப்பல் மற்றும் படகுகளில் கிழக்கே, ஜாசான்சிபார் மற்றும் மாம்பசா ஆகியவற்றிற்கும்,மேற்கில் ஜாவா வரை ஒரு நீண்டிருந்தது. இது கலாச்சாரங்கள், மற்றும் நாகரிகங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் மண்டலமாகவும் அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடலின் விளிம்பில் உள்ள நகரங்கள் மற்றும் மாநிலங்கள் கடலிலும் நிலத்திலும் வர்த்தகத்தில் கவனம் செலுத்துகின்றன. ஆரம்ப காலம்ஆரம்பத்தில் (கி.மு. 2600-1900) ஹரப்பா மற்றும் மெசபட்டோமியா நாகரீக மக்கள் அவர்களுக்கிடையே ஒரு விரிவான பிணைப்புடன் தற்போதுள்ள பஹ்ரைன் மற்றும் ஃபயில்கா ( பாரசீக வளைகுடா ) வரை கடல் வழியாக வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர்.[1] ![]() ஹெலெனிக் காலம்ரோமானிய விரிவாக்கத்திற்கு முன்னர், துணைக் கண்டத்தின் பல்வேறு மக்கள் பல நாடுகளுடன் வலுவான கடல் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆரம்ப காலங்களில் கிரேக்கர்கள் மற்றும் ரோமனியர்கள்களால் அப்பகுதியின் புவியியல் அறிவை அறிந்து கொள்ள இயலவில்லை. செங்கடல் கடல் வழி அறியப்பட்ட பின்னர் இது புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது.. இதன் பின்னர் தெற்காசிய துறைமுகங்களில் வியக்கத்தக்க அளவில் வர்த்தகம் அதிகரித்தது. ரோமானியர்கள் காலம்![]() ![]() கிரீஸ் வர்த்தகத்திற்கு மாற்றாக ரோமானிய பேரரசால் மத்திய தரைக்கடல் பகுதியில் நேரடி கடல்வழி வாணிபம் வலுவடைந்தது. பல்வேறு நிலம் சார்ந்த வர்த்தக பாதைகளின் இடைத்தரகர்கள் அகற்றப்பட்டனர் [2] எகிப்தின் ரோமானியப் பிணைப்பைத் தொடர்ந்து வர்த்தகம் பரந்து விரிந்தது, இது பற்றி , "பருவமழை காலங்களை அறிந்து கொண்டு வர்த்தகம் கையாளப்பட்டது" என ஸ்ட்ராபோ என்பவர் குறிப்பிடுகிறார்.[3] அகஸ்டஸின் காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் 120 கப்பல்கள் மியோஸ் ஹார்மோஸிலிருந்து இந்தியவிற்கு சென்று வந்தது.[4] இந்த வர்த்தகத்தில் தங்கம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது, இந்த தங்கத்தைக் கொண்டு குசான் பேரரசு (குஷான்கள்) அவர்களது சொந்த நாணயத்தை அச்சிட்டனர், இதன் மூலம் இந்தியாவில் நாணயம் அதிக அளவில் பரவியது என பிளைனி தி எல்டர் (NH VI.101) எழுதுகிறார்.[5] ரோமானிய துறைமுகங்கள்கிழக்கு பிரதேச வர்த்தகத்துடன் தொடர்புடைய அர்சினோ, பெரெனிஸ் மற்றும் மையோஸ் ஹார்மோஸ் ஆகியவை மூன்று பிரதான ரோமானிய துறைமுகங்கள் ஆகும். அர்சினே ஆரம்ப வர்த்தக மையங்களில் ஒன்றாக இருந்தது, ஆனால் பெரெனிஸ் மற்றும் மையோஸ் ஹார்மோஸ் ஆகிய துறைமுகங்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் இருந்ததால் அர்சினே துறைமுகம் பாதிக்கப்பட்டது. குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia