இந்திய மாகாணங்களின் சபை (Council of States) பிரித்தானிய இந்தியாவின் சட்டமன்றத்தின் மேலவை ஆகும். கீழவையாக இந்திய மத்தியச் சட்டமன்றம் செயல்பட்டது.
பிரித்தானிய இந்திய ஆட்சி நிர்வாகத்தில் உள்ளூர் இந்தியர்களும் பங்கு கொள்ள வேண்டும் என்பதற்காக, மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் படி, 1919 இந்திய அரசுச் சட்டத்தின் படி, இந்தியச் மாகாணங்களின் சபை நிறுவப்பட்டது.
1947 இந்திய விடுதலைச் சட்டத்தின் படி,
14 ஆகஸ்டு 1947ல் இந்திய மாகாணங்களின் சபை கலைக்கப்பட்டது. இதன் பணிகளை இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் செய்தது.
இந்திய மாகாணங்களின் சபையின் தலைவராக வைஸ்ராய் எனப்படும் இந்தியத் தலைமை ஆளுநர் பதவி சார்ந்த தலைவராக இருப்பர்.[1]
மேலவையின் அமைப்பு
1919 முதல் 1937 முடிய
1919 இந்திய அரசுச் சட்டத்தின் படி, இந்திய மாகாணங்களின் சபை 1919ல் நிறுவப்பட்டது. இச்சபை 60 உறுப்பினர்களைக் கொண்டது. கீழ்கண்டவாறு இச்சபையின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:[2]உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்தாண்டுகள். மகளிர் உறுப்பினர்கள் இல்லை.
- இந்தியத் தலைமை ஆளுநரால் நியமிக்கப்படுபவர்கள் (26)
- அலுவல் சார்ந்த அதிகாரிகள் (20)
- அலுவல் சாராதவர்கள் (6), அவர்களில் ஒருவரை பேரர் மாகாணத்திலிருந்து நியமிக்கப்படுவர்.
- நேரடித் தேர்தலில் தேர்தேடுக்கப்பட்டவர்கள் (34)
- பொது (20): சென்னை மாகாணம் (4), பம்பாய் மாகாணம் (3), வங்காள மாகாணம் (3), ஐக்கிய மாகாணம் (3), பஞ்சாப் மாகாணம் (1), பிகார் மற்றும் ஒரிசா மாகாணம் (3), மத்திய மாகாணம் (1), பர்மா (1), அசாம் உள்ளிட்ட வடகிழக்கு பகுதிகள் (1)
- முஸ்லீம் (10): சென்னை (1), மும்பை (2), வங்காளம் (2), ஐக்கிய மாகாணம்(2), பஞ்சாப் (2), பிகார் மற்றும் ஒரிசா (1)
- வணிகர் சங்கம் (3): மும்பை, வங்காளம் மற்றும் பர்மா
- சீக்கியர் (1)
மாகாணங்கள் வாரியாக மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை - கீழ்கண்டவாறு:
- சென்னை மாகாணம் (5): பொது (4), முஸ்லீம் (1) * பம்பாய் மாகாணம் (6): பொது (3), முஸ்லீம் (2) (பம்பாய் மற்றும் சிந்து), பம்பாய் வணிகர் சங்கம் (1) * வங்காள மாகாணம் (6): பொது (3) (கிழக்கு வங்காளம் (1), மேற்கு வங்காளம், (2), முஸ்லீம் (2) (கிழக்கு வங்காளம் - மேற்கு வங்காளம்), வங்காள வணிகர் சங்கம் (1) * ஐக்கிய மாகாணம் (5): பொது (3) (மத்திய, வடக்கு, தெற்கு), முஸ்லீம் (2) (மேற்கு - கிழக்கு) * பஞ்சாப் மாகாணம் (4): பொது (1), முஸ்லீம் (2) (பஞ்சாப் கிழக்கு - மேற்கு), சீக்கியம் (1) * பிகார் மற்றும் ஒரிசா மாகாணம் (4): பொது (3), முஸ்லீம் (1) * மத்திய மாகாணம் (1): பொது * பர்மா (2): பொது (1), பர்மா வணிகர் சங்கம் (1) * அசாம் (1): பொது (முஸ்லீம்களுடன் சுழற்சி முறையில்]]
வேட்பாளர் தகுதிகள்
1. ஆண்டு வேளாண் வருவாய் ரூபாய் 750 ஆக இருக்க வேண்டும் அல்லது ரூபாய் 1,000 வருமான வரி கட்டியிருக்க வேண்டும். 2.
ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும். 3.
ஏதேனும் ஒரு இந்திய மாகாண சட்டமன்றங்களில் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அல்லது 4. பிரித்தானியப் பேரரசு வழங்கும் விருது அல்லது கௌரவப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
1920ல் ஒரு தேர்தல் தொகுதியானது, இந்தியாவின் மொத்த மக்கள்தொகையான 24 கோடியில், 17,000 வாக்காளர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
1937 முதல் 1947 முடிய
1935ம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டத்தின் படி, இந்திய மாகாணங்களின் சபை அமைப்பில் புதிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது.
இதன் படி உறுப்பினர்களின் எண்ணிக்கை 60லிருந்து 260ஆக உயரத்தப்பட்டது. அதில் 156 உறுப்பினர்கள் பிரித்தானிய இந்திய மாகாணங்களிலிருந்தும், 104 உறுப்பினர்கள், சுதேச சமஸ்தானங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருப்பினும் இம்மாகாண சபைக்கு 1937 முதல் 1946 முடிய தேர்தல்கள் நடைபெறவில்லை.
முதல் மாகாண சபையின் உறுப்பினர்கள் (1921)
[3]
நியமன உறுப்பினர்கள்
- அலுவல் சார்ந்தவர்கள்: ஹென்றி ரலின்சன்
- அலுவல் சாராதவர்கள்: சர் தின்ஷா எடுல்ஜி வாச்சா (மும்பை), ஜி. ஏ. நடேசன் (சென்னை), சர் லெஸ்லி கிரி மில்லர் (சென்னை), மைமன்சிங் சோஷி கந்தா ஆச்சாரியார் (வங்காளம்), பிக்கம்பூர் முகமது மூசாம்மிலுல்லா கான் (ஐக்கிய மாகாணம்), சர் அமீருத்தின் அகமது கான், பஞ்சாப், சர்தார் சரண்ஜித் சிங் (பஞ்சாப்), ஹர்னாம் சிங் (பஞ்சாப் கிறித்தவர்), சர் முகமது ரபீக் (தில்லி), ஜி. எஸ். கபர்டே, பேரர் மாகாணம்
நேரடி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
- அசாம்: சந்திரதார் பரூவா * வங்காளம்: சர் சந்திர மித்தர் (கிறித்துவர்), சர் தேவ பிரசாத் சர்வாதிகாரி, இராஜா பிரமாதா நாத் ராய் (கிழக்கு வங்காளம்), முகமது இஸ்மாயில் கான் (மேற்கு வங்காளம்), மௌலவி அப்துல் கரீம் (கிழக்கு வங்காளம்), *'பிகார் மற்றும் ஒரிசா: தர்பங்காவின் ரமேஷ்வர் சிங், தும்ரோனின் கேசவ பிரசாத் சிங், பாபு ரமெஷ்ரே சௌத்திரி, சையத் ஜாகீர் உத்-தீன், * பம்பாய் மாகாணம்: லாலுபாய் சமல்தாஸ், வாமன் கோவிந்து கலே, பெரேஸ் தேத்னா, இரகுநாத் பாண்டுரெங்கன், இப்ராகீம் ஹரூன் ஜாப்பர், அலி பக்ஷ் முகமது உசைன் (சிந்து முஸ்லீம்), குலாம் முகமது புர்கிரி (சிந்து முஸ்லீம்), சர் ஆர்தர் புரூம் (பம்பாய் வணிகர் சங்கம்) * பர்மா:மவுங் போ பை, சர் எட்கர் ஹோல்பெர்ட்டன் (வணிகர் சங்கம்) *மத்திய மாகாணம்:மனேக்ஜி பிரேம்ஜி தாதாபாய் *சென்னை மாகாணம்: கே. வி. ரெங்கசாமி அய்யங்கார், வி. கே. சீனிவாச சாஸ்திரி, அண்ணாமலை செட்டியார், வி. இராமபத்திர நாயுடு, அகமது தம்பி மரைக்காயர் * பஞ்சாப்: லாலா ராம் சரண் தாஸ், சர் மாலிக் உமர் ஹயத் கான் (மேற்கு பஞ்சாப்), சுல்பிகர் அலி கான், ஜோகிந்திர சிங் (சீக்கியர்) *ஐக்கிய மாகாணம்: ராஜா சர் ராம்பால் சிங், (மத்திய), லாலா சுக்பீர் சின்கா, (வடக்கு) இராஜா மோதி சந்த் (தெற்கு), நவாப் முகமது அப்துல் மஜீத் (மேற்கு), சையத் இராச அலி (கிழக்கு) * பிறர்: மகேந்திர சந்திர நந்தி, கோசிம் பஜார் மகாராஜா, கங்காநாத் ஜா, இ. எம். குக், டென்னிஸ் பிரே, எச். டி. கிரைய்க், பி. சி. மிட்டர், ஜெ. ஏ. ரிச்சி, பி. என். சர்மா, ஜெ. ஆர். வுட், சேவாசீல வேதமூர்த்தி
இரண்டாவது மேலவை உறுப்பினர்கள் (1926)
[4][5]
மூன்றாவது மேலவை உறுப்பினர்கள் (1930-1936)
[6][7]
மேலவைத் தலைவர்கள்
- ஹென்றி மேன்கிரிப் ஸ்மித் (1924)
- மாண்டேகு செராட் டேவிஸ் பட்லர் (1924-1925)
- சர் மனேக்ஜி பிரேம்ஜி தாதாபாய் (1933-1936) (1937-1946)[8]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
|