இந்திய யானை
இந்திய யானை (Elephas maximus indicus) என்பது ஆசியாவை பூர்வீகமாக கொண்ட மூன்று ஆசிய யானை துணை இனங்களில் ஒன்றாகும். ஆசிய யானை எண்ணிக்கை கடந்த மூன்று யானை தலைமுறைகளில் 50%க்கு மேல் அருகியதால், இவை அருகிய இனமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்வினம் வாழ்விட இழப்பு, கவனியாமை, பிரிந்து காணப்படல் ஆகிய காரணங்களினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[1] பண்புகள்பொதுவாக, ஆசிய யானை ஆப்பிரிக்க யானையை விட சிறியது மற்றும் தலை உயர் உடலமைப்பை கொண்டுள்ளனது. இந்த இனமானது குறிப்பிடத்தக்க பாலியல் இருவகைமை கொண்டது. துதிக்கை ஒற்றை விரல் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. இவற்றின் பின்பகுதி புடைத்து அல்லது மட்டமாகக் காணப்படும்.[2] இந்திய யானைகளின் தோள் உயரம் 2 - 3.5 மீ (6.6 - 11.5 அடி) வரையும், அவற்றின் நிறை 2,000 - 5,000 கி.கி. (4,400 - 11,000 பவுண்டு) ஆகவும், 20 சோடி விலா எலும்புகளைக் கொண்டும் காணப்படும்.[2] மிகப்பெரிய இந்திய யானை 3.43 அடி உயரம் கொண்டதாக இருந்தது.[3][4] இந்திய யானைகள் சிறிய காதுகளையும் அகன்ற மண்டையோடுகளையும் ஆப்பிரிக்க யானைகளைவிட பெரிய தந்தங்களையும் உடையன. அவற்றின் கால் புதைமிதியின் முன்பாகம் பெரியதும் அகலமானதும் ஆகும். ஆப்பிரிக்க யானைகளைப் போல் அன்றி அவற்றின் அடிவயிறு சரிசம வீத அளவானவை. ஆனால் ஆப்பிரிக்க யானைகள் ஓப்பீட்டளவில் மண்டையோட்டைவிட பெரிய அடிவயிற்றினைக் கொண்டன. இவற்றின் தோள் நிறம் இலங்கை யானைகளைவிட மங்கியும் சிறிய மங்கல் புள்ளிகளைக் கொண்டும், ஆனால் சுமத்திரா யானைகளைவிட கருமையாகவும் காணப்படும்.[2] பொதுவாக, பெண் யானைகள் ஆண் யானைகளைவிட சிறியதாகவும் தந்தம் சிறியதாகவும் அல்லது தந்தம் அற்றும் காணப்படும்.[5] பரவல் மற்றும் வாழ்விடம்![]() ![]() இந்திய யானைகள் இந்தியா, நேபாளம், வங்காளதேசம், பூட்டான், மியன்மர், தாய்லாந்து, மலாய், லாவோஸ், சீனா, கம்போடியா, வியட்நாம் ஆகிய நாடுகளைப் பிறப்பிடமாகக் கொண்டது. அவை மேச்சல் நிலங்கள், உலர் இலையுதிர் காடுகள், ஈரளிப்பான இலையுதிர் காடுகள், பசுமையான காடுகள், அரை பசுமையான காடுகள் என்பனவற்றை வாழ்விடமாகக் கொண்டன. 1990 களின் ஆரம்பத்தில் கணக்கிடப்பட்ட எண்ணிக்கையளவு பின்வருமாறு:[6] As per the 2017 census, the estimated wild population in India was 27,312 individuals which account for nearly three-fourths of the extant population.[7]
நடத்தை மற்றும் சூழலியல்![]() ![]() ஓர் யானை ஒரு நாளில் 150 கிலோ தாவரப் பொருட்களை உட்கொள்ளும்.[12] இது ஒரு நாளைக்கு 19 மணிநேரம் வரை உணவுக்காக செலவிடும் மற்றும் இதனால் ஒரு நாளில் 220 பவுண்டுகள் வரை சாணம் உற்பத்தி செய்ய முடியும்.[6] தென்னிந்தியாவில் ஒரு ஆய்வுப் பகுதியில், யானைகள் 112 வெவ்வேறு தாவர இனங்களை உண்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவை உட்கொள்ளும் இனங்கள் பருவத்திற்கு ஏற்ப மாறுபடும்.[13] இந்திய யானைகள் பொதுவாக தொடர்புடைய பெண் யானைகள், அவற்றின் பெண் சந்ததிகள் மற்றும் இளம் முதிர்ச்சியடையாத ஆண் யானைகளைக் கொண்ட சிறிய கூட்டங்களில் வாழ்கின்றன. யானைகள் சமூக விலங்குகள் மற்றும் சிக்கலான சமூக உறவுகளை கொண்டிருக்கின்றன. அவை தங்கள் குட்டிகளை வளர்க்கவும், மந்தையைப் பாதுகாக்கவும் பெரும்பாலும் ஒரு குழுவாக வேலை செய்கின்றன. மந்தைகளுக்கு நியமிக்கப்பட்ட தாய்வழித் தலைவர் இல்லை என்றாலும், வயதான யானைகள் கூட்டத்திற்குள் அதிக ஆதிக்கம் செலுத்தும். பொதுவாக வயதுக்கு வந்தவுடன் ஒரு ஆண் யானை மந்தையை விட்டு வெளியேற ஊக்குவிக்கப்படுகிறது.[14] ஒரு யானை தாழ்வான ஒலிகள், முணுமுணுப்புகள் அல்லது முழக்கங்களைப் பயன்படுத்தி தொடர்பு கொள்கிறது. அவையால் பல்வேறு ஒலிகள் மூலம் குறிப்பிட்ட தகவலை மற்ற யானைகளுக்கு தெரிவிக்க முடியும். வேட்டையாடுபவர்களைப் பற்றி எச்சரிக்க ஒரு பெண் யானை வெவ்வேறு அழைப்புகள் மற்றும் குறைந்த அதிர்வெண் கொண்ட குரல்களை எழுப்புகிறது.[14] ஒரு யானை வளர்ந்த நுகர்வு திறன் அமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் பல்வேறு வாசனைகளைக் கண்டறியும் திறன் கொண்டது. காற்றில் இருந்து பிறக்கும் வாசனைகளை உணர்ந்து மற்ற யானைகள் இருப்பதைப் பற்றிய துப்புகளைத் தெரிந்து கொள்ளும்.[14] இந்திய யானையின் ஆயுட்காலம் 40 முதல் 65 ஆண்டுகள் ஆகும், சில விலங்குகள் 75 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கிடைக்கக்கூடிய சான்றுகளின்படி, இந்திய யானை பொதுவாக 50கள் வரை வாழலாம்.[14][15] ஒரு வயது வந்த யானைக்கு மனிதர்களைத் தவிர காடுகளில் எதிரிகள் இல்லை, ஆனால் இளம் யானைகள் அவற்றின் எல்லைகள் ஒன்றுடன் ஒன்று சேரும் பகுதிகளில் புலிகள் போன்ற விளங்ககுகளின் தாக்குதல்களுக்கு உட்படுகின்றன. ஒரு வேட்டையாடும் விலங்கு காணப்பட்டால், மந்தையின் மூத்த உறுப்பினர்கள் எச்சரிக்கை அழைப்புகளை வெளியிடலாம் மற்றும் அவை பாதுகாப்புக்காக மற்ற யானைகளை ஒன்றிணைக்க தூண்டும்.[14] ஒரு பெண் யானை ஆண் யானைகளுக்கு தன் இருப்பையும் தயார்நிலையையும் குறிக்க பல்வேறு சத்தங்களை எழுப்புகிறது. ஒரு இந்திய யானை 8 மற்றும் 13 வயதில் பருவம் அடைகிறது. ஒரு பெண் யானை பருவம் அடைந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு கன்றுகளைத் ஈன துவங்கும். ஆனால் அதே வேளையில், ஒரு ஆண் யானை 30 வயது வரை தந்தையாக வாய்ப்பில்லை.[14] யானையின் கருவுற்றல் காலம் சுமார் 22 மாதங்கள் ஆகும், இது எந்த விலங்கிலும் காணப்படாத மிக நீண்ட கர்ப்ப காலம் ஆகும்.[14] பாதுகாப்புஇந்திய யானைகள் இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 இன் கீழ் பாதுகாக்கப்பட்ட இனமாகும்.[16] மாநிலங்களின் வனவிலங்கு மேலாண்மை முயற்சிகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்காக இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் 1992 இல் ஒரு திட்டத்தை தொடங்கியது. யானைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதன் மூலம், அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் நீண்ட கால உயிர்வாழ்வை உறுதி செய்வதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.[16][17] கலாச்சாரம்![]() இந்திய யானை ஆசியாவில் ஒரு கலாச்சார அடையாளமாக உள்ளது. யானைகள் சில நேரங்களில் தெய்வங்களாக மதிக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் வலிமை, ஞானம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை அடையாளப்படுத்துவதாக கருதப்படுகின்றன.[18] இந்து கடவுள் விநாயகர் யானைத் தலையால் எளிதில் அடையாளம் காணப்படுகிறார்.[19] யானைகள் பெரும்பாலும் கோயில்கள் மற்றும் விரிவான சடங்குகளின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. தசரா மற்றும் பூரம் போன்ற இந்து பண்டிகைகளில் அவை முக்கிய அங்கம் வகிக்கின்றன.[20] இந்தியாவில், இது தேசிய பாரம்பரிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.[21] இது மேலும் தாய்லாந்து மற்றும் லாவோசு நாடுகளின் தேசிய விலங்காகும்.[22][23] இந்திய யானை, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா மற்றும் ஒடிசா ஆகிய இந்திய மாநிலங்களின் மாநில விலங்காகும்.[24] இவற்றையும் பார்க்கஉசாத்துணை
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia