இந்திய விண்மீன் குழாம்
வானத்தின் தென்பகுதியில் காணப்படும் ஒரு விண்மீன் தொகுதியின் பெயர் இந்திய விண்மீன் குழாம் (Indus) அல்லது சிந்து என்பதாகும். இவ்விண்மீன் தொகுதி பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டறியப்பட்டது. ஓர் இந்தியரைக் பிரதிபலிக்கும் இச்சொல்லுக்குரியவர் அக்கால கட்டத்தில் ஆசியா அல்லது அமெரிக்கா எந்த கண்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது அறியப்படவில்லை. குறிப்பிடத்தக்க அம்சங்கள்இந்திய விண்மீன் குழாம் பிரகாசமான நட்சத்திரங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை. ஆல்ஃபா இந்தி என்ற நட்சத்திரமே இக்குழாமில் உள்ள பிரகாசமான நட்சத்திரமாகும். இது ஒரு செம்மஞ்சள் பேருரு விண்மீன் ஆகும். தோற்றப் பொலிவு 3.1 கொண்டுள்ள இந்நட்சத்திரம் பூமியிலிருந்து 101 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. பீட்டா இந்தி என்ற செம்மஞ்சள் பேருரு விண்மீன் 3.7 தோற்றப் பொலிவும் பூமியிலிருந்து 600 ஒளி ஆண்டுகள் தூரத்திலும் உள்ளது. டெல்டா இந்தி என்பது வெள்ளை நட்சத்திரமாகும். பூமியிலிருந்து 185 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் இதன் தோற்றப் பொலிவு 4.4 ஆகும். எப்சிலன் இந்தி என்ற நட்சத்திரமே பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரங்களில் ஒன்றாகும். இது பூமியிலிருந்து 11.8 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. தோற்றப் பொலிவு 4.7 கொண்டுள்ள இந்நட்சத்திரம் ஒரு குறு விண்மீன் வகையாகும். மஞ்சள் குறு விண்மீன் சூரியன் இதைவிட சற்று பெரியதாகவும் வெப்பமாகவும் உள்ளதாகக் கருதலாம். இக்குழாமில் ஒரு சோடி இரட்டை பழுப்பு குறு விண்மீன்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டது. புவிப் புறவெளி அறிதிறன் தேடல்(SETI) ஆய்வுகளுக்கு இதுவே நீண்ட நாட்கள்வரை முதன்மை ஆதாரமாகவும் இருந்தது[2][3] . இந்திய விண்மீன் குழாமில் பிரகாசமான ஒரு இரட்டை நட்சத்திரம் உள்ளது. சிறிய தொழிற்முறை தொலைநோக்கியில் காணக் கிடைக்கின்ற ஒரு இரட்டை நட்சத்திரம் தீட்டா இந்தி ஆகும். இது பூமியிலிருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இதிலுள்ள முதன்மை வெள்ளை நட்சத்திரம் 4.5 தோற்ரப் பொலிவும் இரண்டாவது வெள்ளை நட்சத்திரம் 7.0 தோற்றப் பொலிவும் கொண்டுள்ளது.[4] இந்திய விண்மீன் குழாமில் உள்ள பிரகாசமான ஒரேயொரு மாறும் நட்சத்திரம் T இந்தி ஆகும். ஆழ்ந்த சிவ்ப்பு குறு விண்மீனான இது 11 மாத இடைவெளி கொண்டுள்ளது. அரை இயல்பு கொண்ட இக்குறு விண்மீன் பூமியிலிருந்து 1900 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இதனுடைய குறைந்தபட்ச தோற்றப் பொலிவு 7 ஆக்வும் அதிகப்பட்ச தோற்றப் பொலிவு 5 ஆக்வும் இருக்கிறது [4]. வரலாறு![]() பீட்டர் டிர்க்சூன் கெய்சர் மற்றும் பிரெடரிக் டி ஒளட்மேன் ஆகிய இருவரின் அவதானிப்புகளிலிருந்து பெட்ரூச் பிளான்சியச் கண்டறிந்த பன்னிரண்டு விண்மீன் குழாம்களில் இதுவும் ஒன்றாகும்[4]. பிளான்சியச் சோடோக்கச் ஓண்டியச் உடன் சேர்ந்து இவர் 1597 அல்லது 1598 ஆம் ஆண்டில் வெளியிட்ட 35 சென்டிமீட்டர் விட்டம் கொண்ட வான் உலகில்தான் இவ்விண்மீன் குழாம் முதன்முதலில் தோன்றியது. வான் உலக வரைபடத்தில் இவ்விண்மீன் குழாமின் முதல் சித்தரிப்பு 1603 ஆம் ஆண்டில் சோகன் பேயர் வெளியிட்ட விண்பொருள் அளவியலில் இடம்பெற்றது [5][6]. பிளான்சியச் இவ்விண்மீன் குழாமை வில் இல்லாமல் இரு கைகளிலும் அம்புகள் ஏந்திய நிர்வாண ஆண் உருவத்தில் சித்தரித்திருந்தார்[7] மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia