இந்திய விண்வெளி தொழில்நுட்ப கழகம், திருவனந்தபுரம்
இந்திய விண்வெளித் தொழில்நுட்ப கல்லூரி (Indian Institute of Space Science and Technology) இந்திய விண்வெளித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகும். இது உலகில் முதன்முறையாக விண்வெளித்துறை சார்ந்த கல்விக்கென்று உருவாக்கப்பட்டுள்ள கல்லூரியாகும். இந்த கல்லூரி தொடங்க 26 ஏப்ரல், 2007 ம் ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. முன்னாள் விண்வெளித் துறை தலைவர் மாதவன் நாயர் இதனை 14 செப்டம்பர், 2007 அன்று தொடங்கி வைத்தார். தொடங்கி ஓராண்டுக்குள் இது நிகர் நிலைக்கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இந்திய விண்வெளித்துறையில் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும். இக்கல்லூரியின் துணைவேந்தராக அப்துல் கலாம் உள்ளார். துறைகள்இளங்கலைப்பட்டப் படிப்பு
முதுநிலை பட்டப்படிப்பு
ஆராய்ச்சிப் படிப்புவிண்வெளித்துறையில் முனைவர் பட்டம் பெறலாம். வெளி இணைப்புகள்அதிகார்ப்பூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2012-01-24 at the வந்தவழி இயந்திரம்
|
Portal di Ensiklopedia Dunia