இந்துபாலா
இந்துபாலா (1898 - 30 நவம்பர் 1984), சில சமயங்களில் மிஸ் இந்துபாலா, இந்துபாலா டெபி, இந்துபாலா தேவி என்று அழைக்கப்படுபவர் ஒரு வங்கப் பாடகியும், நடிகையும் ஆவார். இவர் 1975 இல் சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார். ஆரம்ப கால வாழ்க்கைஇந்துபாலா அமிர்தசரசில் மோதிலால் போஸ் மற்றும் ராஜபாலாவின் மகளாக பிறந்தார். இவரது பெற்றோர் கிரேட் பெங்கால் சர்க்கசில் இருந்தனர். [1] இவர் பிறந்த பிறகு இவரது பெற்றோர் பிரிந்துவிட்டனர். பின்னர் கல்கத்தாவில் தனது தாயுடன் இவர் வசித்து வந்தார். கௌஹர் ஜான், [2] கமல் தாஸ்குப்தா, காஜி நஸ்ருல் இஸ்லாம் உட்பட பல இசை ஆசிரியர்களிடம் கல்கத்தாவில் பாடல் பயிற்சி பெற்றார். [3] தொழில்இந்துபாலா சிறந்த வங்கப் பாடகிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். 1915 அல்லது 1916 இல் கிராமபோன் ரெக்கார்டுகளுக்கான நூற்றுக்கணக்கான பதிவுகளில் முதல் இடத்தைப் பிடித்தார் [4] இவர் தன் தாயின் நாடக நிறுவனமான ரம்பகன் பெண் காளி தியேட்டர் மற்றும் ஸ்டார் தியேட்டர் போன்ற நாடக நிறுவனங்களின் நாடகங்களில் நடித்தார். இவர் அகில இந்திய வானொலியில் 1927 இல் தொடங்கியும், ஒலிபரப்பாளரின் இரண்டாவது நாள் ஒலிபரப்பிலும், தொடர்ந்து 1930 களில் பாடினார். [5] 1936 ஆம் ஆண்டு மைசூர் மகாராஜாவின் அரசவைப் பாடகியாக நியமிக்கப்பட்டார். [6] 1930களின் தொடக்கத்தில் இவர் பேசும் படங்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்தார், மேலும் ராஜ்ராணி மீரா (1933), சதி சுலோச்சனா (1934), நவீன சாரங்கதரா (1936) உட்பட இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். இவர் 1950 இல் நடிப்புத் துறையில் இருந்து ஓய்வு பெற்றார். 1975 இல் இவர் சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார் இந்துபாலா தனது வாழ்நாளின் பெரும்பகுதியை கல்கத்தாவின் ரம்பகன் சுற்றுப்புறத்தில் வாழ்ந்தார். [7] மேலும் அந்த மாவட்டத்தில் குவிந்துள்ள நடிகைகள் மற்றும் பாலியல் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தார். “நான் ராமபகனின் இந்து” என்று அறிவித்தார். "இங்கே நான் இசையைக் கற்றுக்கொண்டேன், என்னை நிலைநிறுத்திக் கொண்டேன், மரியாதை பெற்றேன்." என்றார். தனிப்பட்ட வாழ்க்கைபல வருடங்களாக உடல் நலம் குன்றிய நிலையில் இருந்த இந்துபாலா 1984 இல் கல்கத்தாவில் எண்பதுகளின் நடுப்பகுதி வயதில் காலமானார். [3] பிபூதிபூஷன் பந்தோபாத்யாயின் "ஐன்ஸ்டீன் அண்ட் இந்துபாலா" (2016) என்ற சிறுகதையின் முதன்மைக் கதாபாத்திரங்களில் இவரும் ஒருவர். 2020 இல் இந்துபாலாவின் பாடல் பதிவுகளின் தொகுப்பு வினைலில் தாரா டிஸ்க் மூலம் வெளியிடப்பட்டது. [8] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia