இந்துஸ்தான் அம்பாசடர்![]() ![]() இந்துஸ்தான் அம்பாசிடர் (Hindustan Ambassador) என்பது சி.கே. பிர்லா நிறுவனத்தின் ஓர் அங்கமான இந்துஸ்தான் மோட்டர்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தானுந்து. உற்பத்தி துவக்கம்குசராத்து மாநிலம் ஜாம்நகர் மாவட்டம் ஓகா நகரத்தில் 1948 ல் ஐக்கிய இராச்சியத்தில் உற்பத்தி செய்த மாரிஸ் ஆக்ஸ்ஃபர்ட் தானுந்தின் ஆதாரத்தில் இத்தானுந்து உற்பத்தி துவங்கியது.[1] பின் இத்தொழிற்சாலை மேற்கு வங்க மாநிலம், கூக்ளி மாவட்டம், உதர்பரா நகரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உற்பத்தி தொடங்கியது. வடிவமைப்புநான்கு கதவுகள் இத்தானுந்திலுள்ளது. இன்று வரை வடிவமைப்பு பெரும்பான்மையாக மாற்றாமல் அம்பாசடர் வண்டி உற்பத்தி செய்யப்படுகிறது. தரச்சான்றுஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற தானுந்து கண்காட்சியில் வாடகை தானுந்து வரிசையில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டது.[2][3] உற்பத்தி நிறுத்தம்அம்பாசடர் கார்களுக்கு சந்தையில் தேவை குறைந்ததாலும் நிதிப் பற்றாக்குறையாலும் அவற்றின் தயாரிப்பை நிறுத்தி வைப்பதாக ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் 2014 இல் தெரிவித்தது. [4] [5][6][7] [8] இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பியூஜியாட் நிறுவனம் அம்பாசிடர் பிராண்டை வாங்கியது.[9] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia