இமாம்
இமாம் (Imam; அரபி: إمام) என்பது இசுலாமியர்களின் தலைமை நிலையை குறிக்கும். பொதுவாக இது பள்ளிவாசலில் வழிபாடு நேரத்தில் வழிபாட்டை தலைமை ஏற்று நடத்துபவரை குறிக்கும். இமாம் என்பவர் தொழுகையை நடத்துபவர் மட்டுமல்லாமல் மதத் தலைவராகவும், மதம் தொடர்பான நிகழ்வுகளில் மக்களுக்கு ஆலோசனை கூறுபவராகவும் இருப்பார். சியா இசுலாமியர்கள் பழக்கப்படி இமாம் என்பவர் முகம்மது நபி அவர்களின் குடும்பத்தினர்களான பன்னிரு இமாம்களை குறிக்கும்.[1][2] பணிகள்![]()
தகுதிகள்
ஹதீஸ் தொகுப்பாளர்கள்முகம்மது நபி கூறிய ஹதீஸ்களை தொகுத்த முகம்மது அல்-புகாரி, முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ், இமாம் திர்மிதி, இமாம் நஸாயீ , இமாம் அபூதாவூத் போன்றவர்களும் இமாம் என அழைக்கப்படுகின்றனர். மத்ஹப்சுன்னா இசுலாமிய பிரிவை சேர்ந்த நான்கு மத்ஹப் தோற்றுவித்த இமாம் மாலிக் [5], இமாம் அபூஹனீபா, இமாம் அகமது இப்னு ஹன்பல், இமாம் ஷாபி போன்றவர்களும் இமாம் என அழைக்கப்படுகின்றனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia