இமாலய ஓநாய்
![]() இமாலய ஓநாய்கள் (Himalayan wolf, Canis lupus) சாம்பர் ஓநாய்கள் எனப்படும் ஓர் இனத்தின் பிரிவாகும். மனிதர்களால் இனங்காணப்பட்ட ஒரு புதிய இன ஓநாயாக இந்த இமாலய ஓநாய்களைக் கணிக்கிறார்கள். மெல்லிய பளுப்பு நிறம் கொண்ட இந்தக் காட்டு விலங்குகளில், சாம்பர் நிறமும் இருக்கவே செய்கின்றது. முகத்தைச் சுற்றி பல ஓநாய்களுக்கு வெள்ளை அல்லது கறுப்பு நிறம் படர்ந்திருக்கும். நெஞ்சுப் பகுதியிலும் இதே நிறங்கள் காணப்படும். வாழ்விடம்இந்தியாவின் சில குறிப்பிட்ட பிராந்தியங்களிலேயே இந்த இன ஓநாய்கள் காணப்படுகின்றன. இதில் ஜம்மு, கஷ்மீர், இமாலயப் பிராந்தியம் உள்ளடக்கம்.[1][2][3] நேபாளத்திலும் இந்த இன ஓநாய்களைக் காணமுடியும். மொங்கோலியா, சீனா போன்ற நாடுகளில் கூட இந்த இன ஓநாய்களை இனங் கண்டுள்ளார்கள். ஆரம்பத்தில் இவை இமயமலைப் பிராந்தியத்திற்குரியவை என்ற கணி்ப்பில், இமாலய ஓநாய்கள் என்ற பெயரைப் பெற்றன. ஆனால் காலப்போக்கில்தான் இவை வேறு பிராந்தியங்களிலும் வாழவல்லன என்று தெரியவந்திருக்கின்றது. இயல்புஇந்த இன ஓநாய்கள் சிறு தொகைகளிலேயே காணப்படுவதால், இவை சிறு கூட்டங்களாகவே வாழ்கின்றன. ஒரு கூட்டத்தில் ஆறு தொடக்கம் எட்டு ஓநாய்களே இருப்பதுண்டு. கணிசமான அளவு பிரதேசத்தை ஒவ்வொரு கூட்டமும் தமக்கு வைத்துள்ளன. இந்தப் பிராந்தியம் பல நுாறு மைல்கள் தொலைவுக்கு நீளலாம். தங்கள் எல்லைகளைப் பாதுகாக்கும் விடயத்தில், பெரிய அளவில் மூர்க்கத்தனமாக இவை நடந்து கொள்வதும் இல்லை. இந்த இமாலய ஓநாய்கள் வாழும் பிராந்தியத்தில் இந்திய ஓநாய்கள் என்ற இனமும் கலந்து காணப்படுகின்றன. ஆனால் இந்த இரண்டு இன ஓநாய்களும் ஒன்றையொன்று நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால் ஆக்ரோஷமாக முட்டி மோதுவதில்லை. உறுமலும் ஊளையிடுதலுமாக சப்தமெழுப்புவதைத் தவிர, வேறு எதுவும் செய்யாமல் ஒன்றையொன்று கடந்து போய்விடுகின்றன. உணவுபொதுவாக இந்த ஓநாய்களின் உணவு சிறிய , நடுத்தர அளவிலான மிருகங்களாகவே இருக்கும். பெரிய எலிகள், முயல்கள் போன்றவையே பெரும்பான்மைாயான உணவு வகைகளாக இருப்பதுண்டு. . சில சமயங்களில் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் பெரிய இரைகளைக் குறிவைத்து தாக்குவதுண்டு. இந்த ஓநாய்கள் நல்ல வேட்டைக்காரர்களாக இருப்பதோடு, ஒரு வாய்ப்பை நழுவவிட்டால், அடுத்த வாய்ப்பு என்பது நிச்சயமில்லாதது என்பதை நன்கு உணர்ந்திருக்கின்றன. இனப்பெருக்கம்இரண்டு வயதைத் தொட்டதும் இந்த ஓநாய்கள் உடலளவில் இனவிருத்திக்குத் தயாராகி விடுகின்றன. இதன் காரணமாகவே தமக்கு ஒன்றரை வயதாகும்போது, இவை கூட்டத்தை விட்டு விலகிவிடுகின்றன. பிரசவ காலத்திற்கு முன்பு தமக்கு ஒரு துணையைத் தேடிக்கொண்டு, தமக்கான ஒரு பிராந்தியத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவே இந்த முன்னேற்பாடு. பொதுவாக ஒரு பெண் நான்கு தொடக்கம் ஆறு குட்டிகளை ஈனும். முதலிரு மாதங்கள் தன் குட்டிகளை தன் வதிவிடத்தில் வைத்து தாய் மிக நன்றாகப் பராமரிக்கும். இதன் முடிவில் தன் கூட்டத்தோடு இது மீண்டும் இணைந்து கொள்வதுண்டு. இந்திய ஓநாய்களும் இமாலய ஓநாய்களும் மிக நெருக்கமாக வாழ்வதால், இந்த இரண்டு இன ஓநாய்களின் கலப்பு இனப்பெருக்கத்தால் புதிய இனக் குட்டிகள் பிறக்கலாம் என்பது வல்லுனர்களின் கணிப்பு. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia