இம்ருல் கயாஸ்
இம்ருல் கயாஸ்: (Imrul Kayes, பிறப்பு: பிப்ரவரி 2, 1987[1]) வங்காளதேசம் துடுப்பாட்ட அணியின் துவக்க துடுப்பாட்டக்காரராவார், வங்காளதேச மெகிர்பூர் பிரதேசத்தில் பிறந்த இவர் வங்காளதேசம் தேசிய அணி, வங்காளதேச துடுப்பாட்ட ஏ, அணி வங்காளதேச துடுப்பாட்ட வாரிய xi அணி, ககுள்ன அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.இவர் வங்காளதேச அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.[1] சர்வதேச போட்டிகள்2006 ஆம் ஆண்டில் தனது முதல் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார்.இவர் வங்காளதேச அணியில் தேர்வாவதற்கு முன்பாக 15 முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 16 ஒருநாள் உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடினார். இவர் சிட்டகொங்கில் நடைபெற்ற நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார்.[1] இந்தப் போட்டியில் மூன்றாவதாக கள இறங்கிய இவர் 12 ஓட்டங்களை எடுத்தார். இந்தப் போட்டியில் 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.[2] நவம்பர் 2008 இல் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 10 ஓட்டங்களும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 4 ஓட்டங்களும் எடுத்தார்.[3] 2018 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .[1] பெப்ரவரி 8 , இல் தாக்காவில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார்.[1] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 55 பந்துகளில் 19 ஓட்டங்களை எடுத்து பெராராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 22 பந்துகளில் 17 ஓட்டங்கள் எடுத்து ஹெராத்தின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 1 நான்கு ஓட்டமும் 1 ஆறு ஓட்டமும் அடங்கும். இந்தப் போட்டியில் இலங்கை அணி 215 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[4] 2010 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் தனது முதல் நூறு ஓட்டங்களை எடுத்தார். இந்த ஆண்டில் 867 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் இந்த ஆண்டில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர்களின் வரிசையில் ஐந்தாவது இடம் பிடித்தார். பின் நவமபர் 2010 இல் வங்காளதேசத் துடுப்பாட்ட வாரியம் இவரை பி பிரிவில் ஒப்பந்தம் செய்தது.[5] 2017 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப்போட்டிகளில் முஸ்தஃபிகுர் ரஹீம் காயம் காரணமாக விலகியதால் இவர் குச்சக் காப்பாளராக செயல்பட்டார். இந்தப் போட்டியில் இவர் குச்சக் காப்பாளராக 5 இலக்குகளைக் கைப்பற்ற உதவினார். இதன்மூலம் பிரதிக் குச்சக்காப்பாளராக 5 இலக்குகள் வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார். 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற 2010 ஐசிசி உலக இருபது20 போட்டியில் இவர் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். மே 1 இல் இஸ்லத்தில் நடைபெற்ற பாக்கித்தான் அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் முகம்மது ஆமிரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாக்கித்தான் அணி வெற்றி பெற்றது.[6] சான்றுகள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia