இயக்க நரம்பணுஇயக்க நரம்பணுக்கள் (ஆங்கிலம்: Motor neuron) மூளை மற்றும் தண்டுவடத்தில் காணப்படும் நரம்பணுக்களின் ஒரு வகையாகும். இவைகள் மூளை மற்றும் தண்டுவடம் பெற்ற உணர்வுகளுக்கு ஏற்றவாறு கட்டளைகளை வெளிக்காவும் நரம்பு மூலம் உடலின் பல பகுதிகளுக்கு அனுப்புகிறது.[1][2] ![]() இயக்க நரம்பணுக்கள் பெரு மூளையின் இயக்கு புறணி, முள்ளந்தண்டு வடம் மற்றும் மூளைத்தண்டு பகுதிகளில் அமைந்துள்ளது. இயக்க நரம்பணு வெளிக்காவும் நரம்புகள் மூலம் கட்டளைகளை கடத்துகிறது. வெளிக்காவும் நரம்பு (Efferent nerve fiber) என்பது இயக்கு நரம்பு ஆகும். வெளிக்காவும் நரம்புகள் இவையே மைய நரம்புத் தொகுதியிலிருந்து சமிக்ஞைகளை செயற்படு உறுப்புகளில் இருக்கும் இயக்க நரம்பணுக்களுக்குக் கடத்தும் நரம்புகள். எடுத்துக் காட்டாக மைய நரம்புத் தொகுதியிலிருந்து ஒரு செயலுக்கான சமிக்ஞையை தசை, சுரப்பி போன்ற உடல் உறுப்புக்களுக்கு காவிச் செல்லும்.[3][4][5] ![]() வகைகள்இயக்க நரம்பணு இரு வகையாக பிரிக்கப்படுகிறது அவைகள் முறையே மேல் இயக்க நரம்பணு, கீழ் இயக்க நரம்பணு ஆகும். மேல் இயக்க நரம்பணுபெரு மூளையின் புறணியில் உள்ள இயக்க நரம்பணுக்களே மேல் இயக்க நரம்பணுக்கள் ஆகும். இவைகளின் நரம்பிழை இடை நரம்புகள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ முள்ளந்தண்டு வடத்தில் உள்ள கீழ் இயக்க நரம்பணுக்களுடன் இணைக்கப்படுகிறது.[1] கீழ் இயக்க நரம்பணுமுள்ளந்தண்டு வடத்தில் உள்ள கீழ் இயக்க நரம்பணுக்கள் நரம்பிழைகள் மூலம் ஒரு செயலுக்கான சமிக்ஞையை தசை, சுரப்பி போன்ற உடல் உறுப்புக்களுக்கு காவிச் செல்லும். கீழ் இயக்க நரம்பணு ஆல்பா, பீட்டா, காமா என மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது.[1][2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia