இரங்கிரி தம்புள்ளை பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்
இரங்கிரி தம்புள்ளை பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம் இலங்கையின் வட மத்தியமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு துடுப்பாட்ட அரங்கமாகும். இவ்வரங்கம் தம்புள்ளைக்கு அருகில் இரங்கிரி தம்புள்ளை கோயிலுக்கு சொந்தமான 60 ஏக்கர் (240,000 m2) நிலத்தில் தம்புள்ளை குளத்தையும் தம்புள்ளை பாறையையும் பார்த்தபடி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வரங்கில் அண்ணளவாக 16,800 பேருக்கு இருக்கை வசதிகள் உள்ளது.[1] 2000 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் இவ்வரங்கின் முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கும் இலங்கை துடுப்பாட்ட அணிக்கும் இடையில் நடைபெற்றது. 2003 ஆம் ஆண்டில் பகல் - இரவு ஆட்டங்களுக்காக இவ்வரங்கில் ஒளி வெள்ள விளக்குகள் அமைக்கப்பட்டன. அரங்கம்ஆண்டு முழுவதும் ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளை மழைத் தடங்கள் இல்லாமல் நடத்தக்கூடிய வகையில் இலங்கையின் உலர் வலயத்தில் ஒரு பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம் இலங்கை துடுப்பாட்டத்துக்கு தேவைப்பட்டது. இலங்கை துடுப்பாட்ட கட்டுப்பாட்டு வாரியத்தின் அந்நாள் தலைவர் திலங்க சுமதிபால தலைமையில் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிதி ஒதுக்கீட்டில் நடைபெற்றது. 167 நாட்களில் இவ்வரங்கம் கட்டிமுடிக்கப்பட்டது. கட்டுமானப் பணிகளின் முடிவில் பன்னாட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும் பின்னர் நிலத்தின் குத்தகையில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக 2003 ஆண்டுவரை போட்டிகள் நடைபெறவில்லை. இவ்வரங்கின் பட்டிகை பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானதாகும். இங்கு காணப்படும் ஆழமற்ற நிலத்தடி நீர்மட்டத்தாலும் அதன் மூலம் பட்டிகையில் ஏற்படும் நீர் கசிவாலும் காலை வேளையில் வேகப் பந்துவீச்சாளர்கள் நன்மையடைவதோடு மாலையில் பட்டிகை நொறுங்கும் தன்மையைக் கொண்டிருப்பதால் சுழல்பந்துவீச்சாளர்களும் நன்மையடைகின்றனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia