இரஞ்சித் தத்தா
இரஞ்சித் தத்தா (Ranjit Dutta) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இவர் பிகாலி தொகுதியில் 2016 ஆம் ஆண்டு முதல் அசாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். முன்னதாக 2001 முதல் 2011 ஆம் ஆண்டு வரை பிகாலியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். சர்பானந்தா சோனோவால் தலைமையிலான அரசாங்கத்தில் 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை கைத்தறி, சிறுபான்மையினர் நலன், நெசவு மற்றும் பட்டு வளர்ப்பு அமைச்சர் (காதி மற்றும் கிராமத் தொழில் உட்பட) ஓர் அமைச்சராகவும் இருந்தார்.[1][2] ஆரம்பகால வாழ்க்கைஇரஞ்சித் தத்தா பிசுவநாத் மாவட்டத்தில் உள்ள அட்டிபோந்தாவில் 1957 ஆம் ஆண்டு சனவரி மாதம் 24 ஆம் தேதியன்று பிறந்தார். மறைந்த குலதர் தத்தா மற்றும் இலாபன்யா தத்தா ஆகியோர் இவரது பெற்றோர்களாவர். 1974 ஆம் ஆண்டு தேச்பூரில் உள்ள தர்ராங் கல்லூரியில் உயர்நிலைப் படிப்பை இவர் முடித்தார்.[3] அரசியல் வாழ்க்கை2001 அசாம் சட்டப் பேரவைத் தேர்தலில் பிகாலி தொகுதியின் பாரதிய சனதா கட்சி வேட்பாளராக தத்தா போட்டியிட்டார். தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 50.65% வாக்குகளைப் பெற்ற இவர் மொத்தமாக 33348 வாக்குகளைப் பெற்றார். முன்னதாக கடந்த 10 ஆண்டுகளாக பதவி வகித்த காங்கிரசு கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பர்ணபாசு தந்தியை இவர் 13529 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4] 2006 அசாம் சட்டப் பேரவைத் தேர்தலில், தத்தா பிகாலியில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலில் மொத்தமாக 28633 வாக்குகள் பெற்றார். தனது நெருங்கிய எதிரியான காங்கிரசு வேட்பாளரை 8979 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4] 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டப் பேரவைத் தேர்தலில், தத்தா பிகாலியில் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார். 22662 வாக்குகள் மட்டுமே பெற்றார். இது மொத்த வாக்குகளில் 28.02% சதவீதமாகும். காங்கிரசு வேட்பாளரும் பிற்காலத்துல் நாடாளுமன்ற உறுப்பினருமாக இருந்த பல்லவ லோச்சன் தாசிடம் 18136 வாக்குகள் வித்தியாசத்தில் இரஞ்சித் தோற்கடிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டப் பேரவைத் தேர்தலில், தத்தா பிகாலியில் மீண்டும் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். 52152 வாக்குகள் பெற்றார். இது மொத்த வாக்குகளில் 56.2% சதவீதமாகும். எதிர்த்துப் போட்டிய காங்கிரசு வேட்பாளரை 23601 வாக்குகள் வித்தியாசத்தில் வித்தியாசத்தில் இரஞ்சித் தோற்கடித்தார். சோனோவால் அமைச்சரவையில் கைத்தறி, சிறுபான்மையினர் நலன், நெசவு மற்றும் பட்டு வளர்ப்பு அமைச்சராக தத்தா சேர்க்கப்பட்டார். இவர் 24 மே 2016 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதியன்று கவுகாத்தியில் ஓர் அமைச்சராகப் பதவியேற்றார்.[5][6][7] 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டப் பேரவைத் தேர்தலில், தத்தா பிகாலியில் மீண்டும் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். 53583 வாக்குகள் பெற்றார். இது மொத்த வாக்குகளில் 50.93% சதவீதமாகும். எதிர்த்துப் போட்டிய வேட்பாளரை 29839 வாக்குகள் வித்தியாசத்தில் வித்தியாசத்தில் இரஞ்சித் தோற்கடித்தார். ஆனாலும் இவர் சர்மா அமைச்சகத்தில் சேர்க்கப்படவில்லை. தனிப்பட்ட வாழ்க்கைதத்தா 1 மே 1991 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியன்று கீதா தத்தாவை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தத்தா சமூக சேவையில் தனி ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார். இரிது ராச் போருவா, குணால் ராச் தத்தா போருவா, இராகுல் ராச் தத்தா போருவா மற்றும் அனாமிகா போருவா என்பவை இவரது மருமகன்களின் பெயர்களாகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia