இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியர் போர்
இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியர் போர் (Second Anglo-Sikh War), சீக்கியப் பேரரசுக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே 1848 முதல் 1849 முடிய நடைபெற்றது. இப்போரின் இறுதியில் கிழக்கிந்தியக் கம்பெனி வெற்றி பெற்று, சீக்கிய பேரரசின் ஆட்சி முடிவுற்றது.[1] சீக்கியப் பேரரசில் இருந்த பஞ்சாப், ஆப்கானித்தான் பகுதிகளை ஆங்கிலேயர்கள் தக்க வைத்துக் கொண்டு, காஷ்மீர், லடாக் மற்றும் ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதிகளை, இராசபுத்திர குலத்தின் டோக்ரா வம்சத்தின் ஜம்மு மன்னர் குலாப் சிங்கிடம் 75 இலட்சம் ரூபாய்க்கு விற்று விட்டனர்.[2] இதனால் புதிய ஜம்மு காஷ்மீர் இராச்சியம் உருவானது. போருக்கான பின்புலம்மகாராஜா ரஞ்சித் சிங் காலத்தில் சீக்கியப் பேரரசு விரிவடைந்து கொண்டிருந்த காலத்தில், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் தங்கள் நிலப்பரப்பை இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்கிலும், வடமேற்கிலும் விரிவாக்கம் செய்து கொண்டிருந்தனர். முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போருக்குப் பின்பும், சீக்கியர்கள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு ஒத்துப் போகாமையே இரண்டாம் ஆங்கிலேய சீக்கியப் போருக்குக் காரணமாயிற்று.[3] இதனையும் காண்கஅடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
மேல் வாசிப்பிற்கு
|
Portal di Ensiklopedia Dunia