இரண்டாம் சர்வசேனன்

இரண்டாம் சர்வசேனன்
மகாராஜா
ஆட்சிக்காலம்சுமார் 415 - 455 பொ.ச.
முன்னையவர்இரண்டாம் பிரவரசேனன்
பின்னையவர்தேவசேனன்
மரபுவாகாடகப் பேரரசு

இரண்டாம் சர்வசேனன் ( Sarvasena II ) (ஆட்சி சுமார் 415 – 455 பொ.ச. [1] ) வாகாடக வம்சத்தின் வத்சகுல்மா கிளையின் ஆட்சியாளராவார். இவர் இரண்டாம் பிரவரசேனனின் மகனும் வாரிசும் ஆவார்.

பின்னணி

இவர் தனது எட்டு வயதிலேயே அரியணை ஏறினார். அஜந்தா கல்வெட்டின் பாதுகாக்கப்பட்ட பகுதி இளம் மகனும் வத்சகுல்மாவின் இரண்டாம் பிரவரசேனனின் வாரிசுமான பெயரை வழங்காததால், இவரது அடையாளம் வாகாடர்களின் ஆரம்பகால வரலாற்றாசிரியர்களுக்குத் தெரியவில்லை. இருப்பினும், இரண்டாம் சர்வசேனன் இரண்டாம் பிரவரசேனனின் வாரிசு என்பதும், அஜந்தா பரம்பரையின் பெயரிடப்படாத அரசனுடன் அடையாளம் காணப்பட வேண்டும் என்பதும் இப்போது தெளிவாகிறது. [2]

வரலாறு

இவரது தந்தையைப் போலவே, சர்வசேனனும் தனது முன்னோர்களால் பயன்படுத்தப்பட்ட தர்ம-மகாராஜா என்ற பட்டத்திற்குப் பதிலாக மகாராஜா என்ற பட்டத்தைப் பயன்படுத்தினார். சர்வசேனனும் தனக்கான கல்வெட்டுகள் எதையும் வெளியிட்டதாகத் தெரியவில்லை. இந்தக் காரணங்களுக்காக, நந்திவர்தன மற்றும் பிரவரபுரத்தில் இருந்து ஆண்ட முக்கிய வாகாடகா கிளையின் கீழ் சர்வசேனன் இருக்கலாம் என்று வரலாற்றாளர் ஹான்ஸ் பேக்கர் நம்புகிறார். [3] மறுபுறம், அஜய் மித்ரா சாஸ்திரி, சர்வசேனனை தெற்கே இருந்த கதம்ப இராச்சியத்தின் மீது கணிசமான செல்வாக்கைக் கொண்டிருந்த ஒரு சக்திவாய்ந்த ஆட்சியாளராகக் கருதுகிறார். [4]

சர்வசேனன் ஒரு நீண்ட ஆட்சியைக் கொண்டிருந்திருக்கலாம். மேலும், அது பெரும்பாலும் அமைதியானதாகத் தெரிகிறது. பிற்கால வாகாடகப் பதிவுகளில் இவர் ஒரு நல்ல ஆட்சியாளராக விவரிக்கப்படுகிறார். மேலும் இவரது முக்கிய அக்கறை தனது அண்டை நாடுகளுடன் போரிடுவதை விட தனது குடிமக்களின் நலனில் இருந்ததாக தெரிகிறது. [1] சர்வசேனனுக்குப் பிறகு இவரது மகன் தேவசேனன் பொ.ச. 450 களின் முதல் பாதியில் பதவியேற்றார்.

சான்றுகள்

  1. 1.0 1.1 A.S. Altekar (2007). Majumdar, R.C.; Altekar, A.S. (eds.). The Vakataka-Gupta Age. Motilal Banarsi Dass. p. 111. ISBN 9788120800434.
  2. Shastri, Ajay Mitra (1997). Vakatakas: Sources and History. Aryan Books International. p. 229. ISBN 9788173051234.
  3. Bakker, Hans (1997). The Vakatakas: An Essay in Hindu Iconology. Egbert Forsten. ISBN 9069801000.
  4. Bakker (1997), p. 31, footnote 100
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya