இரதன்பூர், சத்தீசுகர்
இரதன்பூர் (Ratanpur) என்பது இந்திய மாநிலமான சத்தீசுகரில் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமும் நகராட்சியுமாகும். இது தேசிய நெடுஞ்சாலை 200இல் பிலாஸ்பூரிலிருந்து அம்பிகாபூர் நோக்கி 25 கிலோமீட்டர் (16 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. வரலாறுஇந்த ஊர் முதலில் இரத்தினபுரிஎன்று அழைக்கப்பட்டது, திரிபுரியின் காலச்சுரிஸின் ஒரு கிளையாக இருந்த இரத்னபுராவின் தலைநகராக இருந்தது. பொ.ச. 1114இல் இங்கு ஆட்சி புரிந்த உள்ளூர் மன்னர் முதலாம் ஜஜ்ஜாலதேவன் கல்வெட்டின் படி, அவனது மூதாதையர் கலிங்கராஜா தட்சிணப் கோசலா பகுதியை கைப்பற்றி, தும்மனாவை (நவீன துமனை) தனது தலைநகராக மாற்றினார். கலிங்கராஜாவின் பேரன் இரத்னராஜா இரத்னபுராவை (நவீன இரத்தன்பூர்) நிறுவியத் தெரிகிறது. [1] 1407ஆம் ஆண்டில், இரதன்பூர் இராச்சியம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. அதன் இளைய கிளை ராய்ப்பூரிலிருந்து ஆட்சி செய்தது. இது 18ஆம் நூற்றாண்டு வரை, சத்தீசுகரின் பெரிய பகுதிகளை ஆண்டு வந்தது. அந்தப் பகுதி போன்சலேக்களின் கைகளுக்கும் பின்னர், பிரிட்டிசாரின் கட்டுப்பாட்டிற்கு செல்லும் வரை ஹைஹையவன்சி இராச்சியத்தின் தலைநகராக தொடர்ந்தது. [2] [3] புள்ளிவிவரங்கள்இந்தியாவின் 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி ,[4] இரத்தன்பூரில் 19,838 மக்கள் தொகை இருந்தது. ஆண்கள் 51% மக்கள்தொகையும் பெண்கள் 49% ஆகவும் உள்ளனர். இரத்தன்பூரின் சராசரி கல்வியறிவு விகிதம் 59% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட குறைவாகவும், ஆண்களின் கல்வியறிவு 70% ஆகவும், பெண் கல்வியறிவு 47% ஆகவும் உள்ளது. இரத்தன்பூரில், மக்கள் தொகையில் 17% 6 வயதுக்குட்பட்டவர்கள். பண்பாடும் மதமும்இந்த நகரம் ஒரு மத மையமாக பிரபலமாக உள்ளது. மேலும் பல இந்து பக்தர்கள் இங்கு வந்து தங்கள் பிரார்த்தனைகளைச் செய்து ஆசீர்வாதங்களைத் தேடுகிறார்கள், மகாமயா கோவில், கோசலேசுவரி என்றும் அழைக்கப்படும் மகாமாயா தெய்வம், தெற்கு கோசலத்தின் (நவீன சத்தீசுகர்) தெய்வத்திற்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்கிறார். பூத மகாதேவ், இராம்தேக்ரி போன்ற பல கோயில்களும் இங்கு அமைந்துள்ளன. போக்குவரத்துராய்ப்பூருக்குப் பிறகு சத்தீசுகர் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமான பிலாஸ்பூரிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் (16 மைல்) தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது. ஊரிலிருந்து பிலாஸ்பூருக்கு விமானம், ரயில் அல்லது பேருந்து மூலம் செல்லலாம். விமான நிலையம்பிலாஸ்பூரிலிருந்து விமான பயணத்தையும் அணுகலாம். பிலாஸ்பூர் விமான நிலையம் மார்ச் 2021இல் திறக்கப்பட்டது. . [5] பிலாஸ்பூரிலிருந்து ஜபல்பூர், டெல்லி மற்றும் அலகாபாத் வரை நேரடி விமானங்கள் உள்ளன மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia