இராகபோசி
இராகபோசி ( Rakaposhi )[3] துமானி எனவும் அறியப்படும் இது காரகோரம் மலைத்தொடரில் உள்ள ஒரு மலைச்சிகரமாகும். இது நகர் பள்ளத்தாக்கு மற்றும் பாக்கித்தானின் வடக்கு நிலங்களின் ஒரு பகுதியாக இருக்கும் பக்ரோட் பள்ளத்தாக்குக்கு நடுவில் அமைந்துள்ளது. மலையானது மிகவும் அகலமானது. மேலும், கிழக்கிலிருந்து மேற்காக ஏறக்குறைய 20 கிலோமீட்டர் அகலம் கொண்ட அதன் உச்சியிலிருந்து அதன் அடிவாரத்திற்கு கிட்டத்தட்ட 6,000 மீட்டர் தூரத்திற்கு நேரடியாகவும் எந்த இடையூறும் இல்லாமல் கீழே இறங்குகிறது.[3] நிலவியல்இராகபோசி என்பது கில்கிட்-பால்டிஸ்தான் பிரதேசத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடரில் கில்கிட் நகருக்கு வடக்கே சுமார் 100 கிமீ (62 மைல்) தொலைவிலுள்ள ஒரு மலை.[1] இது உலகின் 27வது உயரமான மலையாகும். இராகபோசி நகர் பள்ளத்தாக்கின் மேல் எழும்பி நிற்கிறாது. தென்மேற்கு மலைப் பாதை வழியாக ஐக்கிய இராச்சியத்தின் மைக் பேங்க்ஸ் மற்றும் டாம் பேட் ஆகிய மலையேற்ற உறுப்பினர்களால் 1958 இல் முதல் வெற்றிகரமான மலையேற்றம் பதிவுசெய்யப்பட்டது. பூங்காஇராகபோசி, துமானி ("மூடுபனியின் தாய்" அல்லது "மேகங்களின் தாய்") என்றும் அழைக்கப்படுகிறது.[4] நகர் மற்றும் பக்ரோட் பள்ளத்தாக்குகளில் வசிக்கும் மக்கள் இந்த மலைப் பகுதியை சமூகப் பூங்காவாக பராமரித்து வருகின்றனர். இந்த மலைச் சிகரம் மார்கோ போலோ செம்மறி ஆடுகள், பனிச்சிறுத்தை, பழுப்பு கரடி மற்றும் ஓநாய்கள் போன்ற அழிந்து வரும் உயிரினங்களின் தாயகமாகும்.[5] ![]() ![]() மேற்கோள்கள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia