இராசாவின் சிப்பாய் ஆட்டம்
இராசாவின் சிப்பாய் ஆட்டம் (King's Pawn Game) என்பது 1. e4 எனும் நகர்த்தலுடன் ஆட்டத்தை ஆரம்பிக்கும் திறப்புக்களைக் குறிக்கும். வெள்ளையானது தொடங்குவதற்கு சாத்தியமான இருபது நகர்த்தல்களில் ஒன்றைத் தேர்வு செய்து ஆட்டத்தை ஆரம்பிக்கும். இந்த வகைத் திறப்பு வெள்ளைக்கு பெரும்பாலான வெற்றிகளைத் (54.25%) தந்தாலும், அடுத்த பொதுவான நான்கு நகர்த்தல்கலான 1.d4 (55.95%), 1.Nf3 (55.8%), 1.c4 (56.3%), மற்றும் 1.g3 (55.8%) போல வெற்றிகரமானதாக அமையாது.[1] 1.e4 என ஆரம்பிக்கும் அனைத்துத் திறப்புக்களுக்கும் தனித்துவமான பெயர்கள் உண்டு. இராசாவின் சிப்பாயை இரண்டு கட்டங்கள் நகர்த்துவது நல்ல பயனைத்தரும் ஏனென்றால் அது மத்திய கட்டத்தை ஆக்கிரமிப்பதுடன் d5 சதுரத்தின் மீது தாக்குதல் செய்கிறது. மேலும் அந்த நகர்த்தலானது இராசாவின் அமைச்சர் மற்றும் இராணியின் வழிகளைத் திறக்கிறது.
குறிப்புகள்
மேற்கோள்கள்![]() The Wikibook Chess Opening Theory மேலதிக விவரங்களுள்ளன: King's Pawn Opening
|
Portal di Ensiklopedia Dunia