இராஜேஷ் வர்மா
இராஜேஷ் வர்மா (Rajesh Verma) ஓர் இந்திய அரசியல்வாதியும், தொழிலதிபரும், முன்னாள் மாநகரத் துணை தந்தையும் (பாகல்பூர்) லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ்) உறுப்பினரும் ஆவார். இவர் 18வது மக்களவைத் தேர்தலில் பீகாரின் ககாரியா மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] இவர் சூலை 2020-இல் லோக் ஜன் சக்தி கட்சியில் சேர்ந்தார்.[4][5] இளமையும் கல்வியும்இராஜேஷ் வர்மா மார்வாரி சோனார் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய மூதாதையர்கள் பீகாரின் அஜ்மீர் பாகல்பூரில் உள்ளனர். 2014ஆம் ஆண்டில் சாகர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (போபால்) பொறியியல் படிப்பை முடித்தார். வர்மா ஒரு தொழிலதிபர் மற்றும் ஒரு வீட்டு மனைகள் விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார்.[6] அரசியல் வாழ்க்கைவர்மா 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாகல்பூர் சட்டமன்றத் தொகுதி போட்டியிட்டார். சூன் 2017 முதல் திசம்பர் 2022 வரை பாகல்பூரில் துணை நகரத் தந்தையாகவும் பணியாற்றியுள்ளார்.[7] இவர் மார்ச் 2022-இல் பாகல்பூரிலிருந்து எல். ஜே. பி (ஆர். வி. வி) மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[8] இவர் 2024-இல் மக்களவைத் தேர்தலில் 1,61,131 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தியப் பொதுவுடமை கட்சியின் வேட்பாளர் சஞ்சய் குமார் குசுவாகாவை தோற்கடித்தார்.[9][10]
மேலும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia