இராபர்ட்டு ஓவன்
இராபர்ட்டு ஓவன் (14 மே 1771 – 17 நவம்பர் 1858) ஒரு வேல்சு குமுகச் சீர்திருத்தவாதியும் கருத்தியல் செவ்விய சோசலிசம் (Utopian socialism), கூட்டுறவு இயக்கம் ஆகியவற்றைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவர் 1824 இல் அமெரிக்காவுக்குச் சென்று, அங்கு தான் ஈட்டிய பொருளைக்கொண்டு இண்டியானா மாநிலத்தில் தென்கோடியில் வபாசு ஆற்றுப்படுக்கையில் 1000 பேர் கொண்ட உயரிய கருத்தியல் குமுகமாக நியூ ஆர்மனி என்னும் ஒன்றை நிறுவினார். வாழ்க்கை வரலாறுஇராபர்ட்டு ஓவன் நடு இசுக்காட்லாந்தில் உள்ள நியூடவுன் என்னும் 1771ம் ஆண்டு பிறந்தார். அவர் பெற்றோருக்குப் பிறந்த ஏழு குழந்தைகளில் இவர் ஆறாவது குழந்தையாவார். டேவிட் டேல் என்ற மில் உரிமையாளரின் மகள் கரோலின் டேலை திருமணம் செய்து கொண்ட பிறகு அந்த ஆலையின் மேலாளராகவும் பகுதி உரிமையாளராகவும் செயல்பட்டார். ஓவன் ஆலையின் நிருவாகத்தில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினர். தொழிலாளிகளுக்குச் சம்பளத்தைப் பணமாகத் தராமல் பற்றுச் சீட்டுகளாகவும், பொருளாகவும் தந்து வந்த திரக்கு முறை (truck system) எனப்படும் முறையை மேம்படுத்தி மொத்த விலையில் பொருட்களை வாங்கித் தொழிலாளர்களுக்கு கொடுக்கும் கூட்டுறவு முறையை ஏற்படுத்தினார். சிறு குழந்தைகளுக்கு தொழிற்சாலை பராமரிப்பு அளிக்கும் முறையை உருவாக்கினார். உசாத்துணை= வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia