இராமேசுவரம் பெருஞ்சிலந்தி
இராமேசுவரம் பெருஞ் சிலந்தி (Poecilotheria hanumavilasumica) என்பது தமிழ்நாட்டின் இராமேசுவரம் தீவில் காணப்படும் ஒருவகைச் சிலந்தியாகும். கண்டுபிடிப்புஇராமேசுவரம் அனுமார் கோயில் அருகே உள்ள புளிய மரங்களில் இந்தப் பெருஞ் சிலந்தியை ஆண்ட்ரூ ஸ்மித் என்பவர் 2004 இல் கண்டுபிடித்தார்.[1] அனுமார் கோயில் அருகே ஆண்ட்ரூ ஸ்மித் கண்டுபிடித்ததால் அவரின் பெயரையும் அனுமார் பெயரையும் இணைத்துப் பொயெசிலோதுரியா ஹனுமான்விலாசுமிகா (Poecilotheria hanumavilasumica) என்ற விலங்கியல் பெயர் இதற்குச் சூட்டப்பட்டது. இராமேசுவரம் பாராசூட் ஸ்பைடர் (Rameshwaram Parachute Spider) என்று ஆங்கிலத்தில் இந்தச் சிலந்தி அழைக்கப்படுகிறது. தோற்றம்புளிய மரப்பொந்துகளில் காணப்படும் இந்தச் சிலந்திகள் சுமார் 8 அங்குல நீளம் கொண்டது. பார்ப்பதற்கு மனித முகம் அளவு காணப்படுகிறது. சிலந்தியின் கால்களில் மஞ்சள் நிறக்கோடுகள் காணப்படும். பொயெசிலோதெரியா (Poecilotheria) எனப்படும் இந்தப் பெருஞ்சிலந்தி தென் அமெரிக்கக் காடுகளில் வாழும் உலகின் மிகப்பெரிய சிலந்தியான கோலியாத் போர்ட் ஈட்டர் சிலந்தி வகைகளைச் சேர்ந்தது. இந்தச் சிலந்தியின் நச்சுத்தன்மை பாம்புகள், எலிகள், பூச்சிகளைக் கொல்லக்கூடியது. ஆனால் மனிதரை ஒன்றும் செய்யாது. அழியும் நிலைஇராமேசுவரத்தில் இந்தப் பெருஞ்சிலந்திகளைக் கணக்கெடுத்தபோது சுமார் 500-க்கும் குறைவான சிலந்திகளே கண்டெடுக்கப்பட்டன. இவை பார்ப்பதற்குப் பெரியதாக இருப்பதால் மக்கள் பயத்தினால் அடித்துக் கொன்றுவிடுகின்றனர். இதனால் இந்தச் சிலந்திகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.[2] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia